National Voter Registration Act (NVRA)

தேசிய வாக்காளர் பதிவுச் சட்டம்

தமிழ் விளக்கம்

1995 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இச்சட்டத்தின்படி, அமெரிக்கக் குடிமக்கள் ஓட்டுநர் உரிமத்திற்காக விண்ணபிக்கும் போதும், நலத்திட்ட உதவிகள் மற்றும் அரசு சேவைகளைப் பெருமிடங்களிலும் வாக்காளர்களாகப் பதிவுசெய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்படவேண்டுமென்று வலியுறுத்திய சட்டம். இது human SERVE என்ற நிறுவனத்தின் முயற்சியால் கொண்டுவரப்பட்டது
பார்க்க: Human SERVE - வாக்காளர் பதிவு மற்றும் கல்விக்கான தொண்டர்கள் - ரிச்சர்ட் க்ளோவார்டு மற்றும் பிரான்சிஸ் பாக்ஸ் பீவன் என்பவர்களால் 1983 ஆம் ஆண்டு வாக்காளர்கள் பதிவை ஊக்கப்படுத்தவும், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆரம்பிக்கப்பட்ட தொண்டு நிறுவனம். சில இனக்குழுக்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்வதில் இருந்த தடைகளைச் சட்டத்தின் மூலமும், அரசியல் அழுத்தம் கொடுத்தும் அகற்றியதில் இந்த நிறுவனத்தின் பங்கு முக்கியமானது.

English

Federal legislation effective in 1995 giving U.S. citizens the opportunity to register to vote when applying for driver's licenses, welfare assistance, and government services. The legislation was initiated by Human SERVE.