nationalization

நாட்டுடைமையாக்கல், தேசியமயமாக்கல்

தமிழ் விளக்கம்

நாட்டுடைமையாக்கல் அல்லது தேசியமயமாக்கல் (Nationalization) என்பது தனியாரின் உடைமைகளை அல்லது நிறுவனங்களைப் பல்வேறு காரணங்களுக்காக ஒரு நாட்டின் அரசு கையகப்படுத்தும் நடவடிக்கையாகும். பொதுவாக மக்களுக்கு இன்றியமையாத துறைகளை அரசு தன்வசப்படுத்தி அதன் மூலம் பொதுநலன் கருதி உற்பத்தி மற்றும் சேவைகளைச் சீராக நிர்வகிக்க முயற்சிக்கின்றது. தனியார்மயமாக்கல் என்பது இதற்கு எதிரான நடவடிக்கையாகும். பெரும்பாலும் சமத்துவமான பொருளாதார வளர்ச்சியின் பொருட்டே தேசியமயமாக்கல் நடவடிக்கைகள் அமைகின்றன. 2007-09 ஏற்பட்ட சர்வதேச நிதிநெருக்கடியின் போது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளால்தான் இந்தியாவின் பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டது.
இந்தியாவில் வங்கிகள், நிறுவனங்கள் போன்றவை பல தேசியமயமாக்கப்பட்டுள்ளன. 1. 1949 இந்திய விடுதலைக்குப் பின் இந்திய ரிசர்வ் வங்கி தேசியமயமாக்கப்பட்டது. 2. 1953 வான் நிறுவனங்களின் சட்டம் 1953 ன்படி ஏர் இந்தியா நிறுவனம் தேசிய யமயமாக்கப்பட்டது. 3.1955 இந்திய இம்பீரியல் வங்கி மற்றும் அதன் துணை வங்கிகள் பாரத ஸ்டேட் வங்கி என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்டன. 4. 1969 இல் மேலும் 14 இந்திய வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. 5. 1973 நிலக்கரி தொழிலும், எண்ணெய் நிறுவனங்களும் தேசியமயமாக்கப்பட்டன. 6.1980 இல் மேலும் ஆறு வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன 7. 1972 106 காப்பீட்டு நிறுவனங்களை நான்காக தேசியமயமாக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பாடுபட்ட சான்றோர்களின் நூல்கள் பொதுவுரிமை ஆக்கப்பட்டு, தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ் நூல்கள் நாட்டுடைமையாக்கம் செய்யப்படுகிறது.

English

A government's taking over and managing of one or more of a nation's industries. Industries most commonly nationalized include utilities, telephone and postal companies, and mineral production industries formerly under foreign ownership.