nativism

பூர்வீகப் பெருமை / பற்று, அகநிலைக் கருத்துக்கோட்பாடு, திணைக்குடியாதரவுக் கோட்பாடு

தமிழ் விளக்கம்

1. பூர்விக கலாச்சாரங்களே மேலானதென்று பிற கலாச்சாரங்களை உள்வாங்காமலிருப்பது. 2. சில ஆளுமைப் பண்புகள் பிறக்கும் போதே மரபு ரீதியாக பெறப்படுகிறது என்ற கருத்து. இது எந்தவிதமான அனுபவமும் இல்லாமல் தொடங்குவது (tabula rasa) என்பதிலிருந்து வேறுபட்டது. 3. புலம் பெயர்ந்து வருபவர்களால் பூர்வீகக் குடியினருக்கு வாய்ப்புக்கள் குறைவதை எண்ணி, புலம் பெயர்தலையும், அந்நிய நாட்டினருக்குக் குடியுரிமை வழங்குவதிலும் கட்டுப்பாடுகள் கொண்டுவர முயற்சிப்பது.

English

The idea that certain personality factors are not learned but are genetically transmitted or present at birth, that is, the opposite of "tabula rasa." See also archetype.