natural helping network
இயல்பான உதவி வலையமைப்பு, தன்னார்வ உதவி வலையமைப்பு
தமிழ் விளக்கம்
இயல்பாக, நம்பகமான தொடர்புகள் மற்றும் உறவுகள் மூலமாக தொழில்முறை சாராத, பயிற்சி பெறாத தன்னார்வத்துடன் உதவி செய்யும் தொண்டர்கள் மற்றும் அவர்களால் பயனடைவோர் குழு. இயல்பான இந்த உதவி அமைப்பு பெரும்பாலும் தேவையுள்ள குடும்பங்களுக்கிடையேயும், அண்டை வீட்டுக்காரர்களிடமும், சக பணியாளர்களிடையேயும், ஒரே திருச்சபையைச் சார்ந்தவர்களிடையேயும், சில அமைப்புகளின் உறுப்பினர்களிடையேயும், சில பொருளாதார சமூக வர்க்கங்களிடையேயும், பிறர்நலன் பேணும் மனிதர்களிடையேயும் காணப்படும்.
English
Informal, reliable linkages and relationships between nonprofessionals who voluntarily provide important services and supports to people in need and those to whom they provide the services. Most natural helping networks develop among members of the needy person's family or neighbors, fellow employees, members of the person's church, members of associations or social classes to which the person belongs, or altruistic people in the community.