natural resources

இயற்கை வளங்கள்

தமிழ் விளக்கம்

இயற்கை வளங்கள் (natural resources) எனப்படுபவை ஒப்பிட்டளவில் மனிதத் தலையீடுகளின்றித் தன் இயல்பு நிலையில் சூழல் தொகுதிகளில் காணப்படும் பொருட்கள் ஆகும். இயற்கை வளங்கள் சுற்றுச்சூழலிலிருந்து உருவாகுபவை. இவற்றில் பெரும்பான்மையானவை மனித வாழ்விற்கு அத்தியாவசியமானவையாகவும் தேவைகளுக்குப் பயன்படக்கூடியவைகளாகவும் அமைகின்றன. (சுருக்கமாக இயற்கையில் காணப்படுவதும் மனித குலத்திற்குப் பயன்படுவதுமான கூறுகள் இயற்கை வளங்கள் எனப்படும்). இயற்கை வளங்களின் பண்புகள் அவைகளைச் சுற்றியுள்ள ஒரு குறிப்பிட சுற்றுப்புற சூழ்நிலையைப் பொறுத்து, அதனைச் சார்ந்த உயிரினங்கள் வகைகள் மற்றும் அவைகளின் சுற்றுப்புறச் சூழ்நிலைப் பண்புகளின் வேறுபாட்டைப் பொருத்து மாறுகின்றன.
இயற்கை வளங்களில் சில - 1. பயிராக்கவியல் (Agronomy) என்பது அறிவியல் நுணுக்கங்களை கொண்டு தாவரங்களை உணவு, தீவணம், எரி சக்தி மற்றும் நார்ப்பொருட்கள் சம்பந்தமான உற்பத்திகளைக் கையாள்வதாகும். இது மனிதனால் ஆக்கப்படுவதால் ஒரு இயற்கை வளமாகக் கொள்ளமுடியாதென்று கூறுபவர்களும் உளர். 2. நீர், காற்று மற்றும் சுற்றுப்புறச் சுழ்நிலை. 3. செடிகள் / பூக்கள் 4. விலங்குகள் காட்டு விலங்குகள் 5. நிலக்கரி மற்றும் உயிர்ச் சுவட்டு எரிபொருட்கள் (Fossil Fuel), கனிம வளங்கள் (Minerals) 6. வனவியல் மற்றும் வனம் சார்ந்த தாவரவியல் 7. தாவரங்களின் வகைகளும் மேய்ச்சல் தரைகளும் 8. மண் வகைகள் 9. நீர், கடல், ஏரிகள் மற்றும் ஆறுகள்.

English

The products and features of the earth that permit it to support life and meet human needs, including land, air, water, climate, minerals, and biological resources such as trees, wildlife, and vegetation. See also human resources.