necrosis
அழுகிக்காய்தல், திசுப்பகுதி அழுகல், திசு இறப்பு, நசிவு, மடிதல், மரித்தல், உடற்பகுதி இழைம அழுகல், எலும்புடன் உடற்பகுதி இழைமம் அழுகல்
தமிழ் விளக்கம்
இழைய அழுகல் அல்லது திசு அழுகல் அல்லது இழையநசிவு என்பது அதிகளவிலான உடல் திசுக்கள் இறப்புக்குள்ளாகும்போது, இறப்பு ஏற்படக்கூடிய அளவிற்கு தீவிரமாகப் பாதிக்கப்படும் நிலையாகும். ஏதாவது உடல் காயங்கள் ஏற்பட்டதனாலோ, அல்லது தொற்று நோய்களின் தாக்கத்தினாலோ, அல்லது குறிப்பிடக்கூடிய ஒரு நாட்பட்ட நோய்த் தாக்கத்தினால், குருதிச் சுற்றோட்டத்தில் பாதிப்பு ஏற்படும் போதோ இத்தகைய இழைய அழுகல் ஏற்படலாம். இழையங்களுக்கான குருதி வழங்கலில் ஏற்படும் தடையும், அதனால் உயிரணுக்களில் ஏற்படும் தொடர் இறப்புமே, இழைய அழுகலுக்கான முதன்மையான காரணியாக அறியப்படுகின்றது. நீரிழிவு நோய், நீண்ட கால புகைத்தல் போன்ற நிலைகள் இவ்வகை இழைய அழுகலை அதிகரிக்கவல்ல காரணிகளாக உள்ளன.
English
Death of bone or tissue within an area of healthy body parts.