needs assessments (NA)
தேவைகளை மதிப்பிடுதல்
தமிழ் விளக்கம்
தேவைகளை மதிப்பிடுவதென்பது தங்களை நாடிவந்த வாடிக்கையாளரின் பிரச்சனைகள், அவர்களிடமுள்ள ஆதாரங்கள், சாத்தியமான தீர்வுகள், தீர்வுகளை முன்னெடுக்கும் போது ஏற்படும் தடைகள் போன்றவற்றை, போதுமான ஆதாரங்களை முறையாகச் சேகரித்து, அதை மதிப்பீடு செய்து, ஒரு தீர்மானத்திற்கு வருவதாகும். மருத்துவ சமூகப்பணியில் தனி நபர்களிடமும், சமுதாய அமைப்புப் பணிகளில் சமுதாயத்தை முன்னிறுத்தியும் இத்தேவைகள் மதிப்பீடு செய்யப்படும். இதனுடைய முக்கிய நோக்கம் தேவைகளை மதிப்பீடு செய்து அதனடிப்படையில் முன்னுரிமைப்படுத்தி செயல்படுவதாகும்.
English
Systematic appraisals made by social workers and other professionals in evaluating their clients for problems, existing resources, potential solutions, and obstacles to problem solving. In social agencies, needs assessments are made on behalf of the clients who receive clinical services and in communities, on behalf of all the residents. The purpose of needs assessments is to document needs and establish priorities for service. The data come from existing records such as U.S. Bureau of the Census and local government statistics as well as from interviews and research on the relevant population.