needs hierarchy
தேவை வரிசை / தேவைப் படிநிலைகள்
தமிழ் விளக்கம்
ஆபிரகாம் மாஸ்லோ என்ற உளவியலாளர், ஒன்றையொன்று சார்ந்த ஐந்து விதமான அடிப்படைத் தேவைகள் அல்லது இலக்குகளே மனிதர்களை ஊக்குவிக்கின்றன என்பதைக் கண்டறிந்தார். மாஸ்லோவின் இந்தத் தேவைப் படியமைப்புக் கோட்பாடு (Maslow's hierarchy of needs) 1943ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒர் உளவியல் சார்ந்த கோட்பாடு ஆகும். இக் கோட்பாடு மேலாண்மைக் கல்வியில் மானுட உந்துவித்தல் (Motivation) கோட்பாடுகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மாஸ்லோவின் இக் கோட்பாட்டில் மனிதர்கள் முடிவில்லாத பலவித தேவைகளைக் கொண்டிருபவர்களென்றும், ஒரு தேவை பூர்த்தியானதுடன் அவர்கள் இன்னொரு தேவையைப் பூர்த்தி செய்ய முயல்வார்களென்றும், இத்தகைய தேவைகள் ஒரு வரிசை அமைப்பாக அமையுமென்றும் சொல்லப்பட்டது. இந்தத் தேவைகளை 5 வகையாகப் பிரித்து, தேவைகளையும் மக்களின் எண்ணிக்கையையும் தொடர்புபடுத்தி, அவர் ஒரு பிரமிட் வடிவ விளக்கப்படத்தினை இக்கோட்பாட்டில் முன்வைத்தார்.
தேவை வரைபடத்தில் கீழ்ப் பாகத்தில் காணப்படும் மூன்று வகையான தேவை மட்டங்கள், தாழ் தேவைகள் அல்லது பௌதீகத் தேவைகள் எனவும், உயர் மட்டத்தில் காணப்படும் இரண்டு வகையான தேவைகள் உயர் தேவைகள் அல்லது உளவியல் தேவைகள் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. கீழ் மட்டத் தேவைகளில் பூர்த்தியடைந்த மனிதர்கள், அதனை அடுத்துள்ள உயர்மட்ட தேவையினைப் பூர்த்தி செய்ய உந்தப்படுவார்கள் என மாஸ்லோ கோட்பாடு வரையறுக்கிறது. மாஸ்லோ கோட்பாட்டின்படி, மனிதர்களின் தேவைகள் கீழ்க்கண்ட படிநிலைகளில் அமைந்துள்ளன. படிநிலை 1. உயிர் வாழ்க்கைத் தேவைகள் (உணவு, குடிநீர், உடல் தேவைகள் போன்றவை). படிநிலை 2. பாதுகாப்புத் தேவைகள் (உடை, வீடு போன்றவை). படிநிலை 3. சமூகத் தேவைகள் (சொந்தங்கள், நட்புகள் போன்றவை) .படிநிலை 4. சுயமரியாதை, சமூக அந்தஸ்துத் தேவைகள் (பதவி, பட்டம் போன்றவை) .படிநிலை 5. ஆத்ம திருப்தித் தேவைகள் (சமூகத் தொண்டு, தன்னலம் தாண்டிய செயல்கள்).

English
Abraham Maslow's concept of human motivation in which he asserted, first in 1943, that people have five sets of goals or basic needs, each building upon others: physiological needs, safety needs, affiliation needs, ego needs, and self-actualization.