negative campaigning

எதிர்மறைப் பிரச்சாரம்

தமிழ் விளக்கம்

தேர்தலின் பொருட்டோ அல்லது சமூக மாற்றத்தின் பொருட்டோ செய்யப்படும் பிரச்சாரங்களில் தான் ஆதரிக்கும் வேட்பாளர்களின் சிறப்பை பற்றியோ, தான் பிரேரிபிக்கும் மாற்றங்களின் நல்விழைவுகளைப் பற்றியோ பேசாமல் தன்னுடைய போட்டியாளர்களின் உண்மையான அல்லது உண்மையற்ற பலகீனங்களைப் பற்றி பரப்புரை செய்வது
பார்க்க: mudslinging - சேற்றை வாரியிறைத்தல் / புதைகுழியில் தள்ளுதல் / சேற்றுக்குள் தள்ளுதல் - Muckraking சமூக மாற்றத்திற்காக அரசியல் / வணிக நிறுவனங்களின் முறையற்ற நடத்தைகளை வெளிக்கொணரும் முயற்சி என்றால் Mudslinging என்பது தங்களுடைய அரசியல் எதிரிகள் முகம் சுளிக்கும் படியாக அவர்களைப் பற்றி உண்மையான, ஓரளவு உண்மையான அல்லது பொய்யான பிரச்சாரத்தை முடுக்கிவிடுவது.

English

Conducting a political or social-change campaign, with less emphasis on extolling the virtues of the candidates or causes and more on disclosing their actual or claimed liabilities. See also mudslinging.