negative transference
எதிர்மறை இடமாற்றீடு
தமிழ் விளக்கம்
Transference என்றால் வாடிக்கையாளர் தன்னுடைய ஆழ்மன உணர்வுகளை சமூகப்பணியாளரிடம் (உளப்பிணி மருத்துவர்) பகிர்ந்துகொள்ளல். இந்த ஆழ்மனப் பகிர்வு சமூகப் பணியாளர் மீதான கவர்ச்சியாகவோ, சிற்றின்ப இச்சையாகவோ, கோபம், ஆத்திரமாகவோ, அவநம்பிக்கையாகவோ, பெற்றோர் சகோதர நிலை சார்ந்ததாகவோ, அல்லது குரு நிலை கொண்டதாகவோ இருக்கலாம். சமூகப்பணியாளரை சமூகப்பணியாளராகப் பார்க்காமல், வேறுவிதமாகப் பார்ப்பது சிகிச்சையின் பலனைக் குறைக்கலாம் / தடங்கல் ஏற்படுத்தலாம். countertransference என்பது சமூகப் பணியாளரே தன் ஆழ்மன உணர்வுகளின் அடிப்படையில் சுய உணர்வுடனோ, சுய உணர்வின்றியோ வாடிக்கையாளரைப் பெற்றோர் சகோதர நிலை சார்ந்தோ, தன்னுடைய மதிப்பீடுகளின் படி வாடிக்கையாளர் மீது கோபம், ஆத்திரம் கொண்டோ, சிற்றின்ப நாட்டம் கொண்டோ வாடிக்கையாளரைப் பார்ப்பது. உளஇயக்கக் கோட்பாட்டின்படி சமூகப் பணியாளரின் வளர்ச்சிப் பருவ அனுபவ முரண்பாடுகளின் அடிப்படையில் இது அமையலாம். சமூகப்பணியாளர், தனது உணர்வுகளை நுட்பமாக உணர்ந்து புரிந்து கொள்ளாவிட்டால் அவர் அளிக்கும் சிகிச்சை எதிர்பார்த்த பலனைத் தரவியலாது போகலாம். எதிர்மறை இடமாற்றீடு (Negative Transference) என்றால் ஒரு வாடிக்கையாளர் தனக்குச் சிகிச்சையளிப்பவர் மீது ஆத்திரம் கொள்ளல், அவநம்பிக்கை கொள்ளல், விரோதப்போக்கை மேற்கொள்ளல் போன்ற உணர்வுகள். உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டின்படி இந்த மாதிரியான எதிர்மறை உணர்வுகள் மறைந்த நிலையிலோ அல்லது வெளிப்படையாகத் தெரியும் மாதிரியோ இருக்கலாம்.
English
Transference that results in expressions of hostility or distrust or feelings of ill will that a client may have for a psychotherapist or other person. In psychoanalytic theory, it is believed to always exist, whether it is latent or overt.