negativistic personality disorder
எதிர்மறை ஆளுமை, வெற்று மறுப்புவாத ஆளுமை, அழிவுவாத ஆளுமை
தமிழ் விளக்கம்
எதிர்மறைக் குணங்களான உயிர்ப்பற்ற உணர்வு, மந்த நிலை (passive) ஒரு பக்கமும், மறுபக்கம் அடாவடித்தனம், எதையும் மறுத்தல், எதிர்த்தல் (aggressive) செயலற்ற தன்மையும், அடங்காமையும் இணைந்த, எதிர்மறைக் குணங்களின் கூட்டணி கொண்ட ஆளுமை. இது பதினொரு வகையான ஆளுமைச் சிக்கல்களில் ஒன்று. பிற சிக்கல்களாவன 1. சந்தேக ஆளுமை, 2. மனப்பிளவு ஆளுமை, 3. மிகு மனப்பிளவு ஆளுமை, 4. சமூக விரோத ஆளுமை, 5. ஸ்திரமற்ற ஆளுமை, 6 நாடகப்பங்கான ஆளுமை, 7. தற்பூசனை (தற்காதல்) ஆளுமை, 8.தவிர்க்கும் ஆளுமை, 9. சார்ந்திருக்கும் ஆளுமை, 10. அலைபாயும் ஆளுமை, 11.நோயினால் ஏற்படும் ஆளுமை மாற்றம், 12. மேற்சொன்ன எந்த வகையிலும் அடங்காத ஆளுமை.
English
Also called passive-aggressive personality disorder, a pervasive pattern of negativistic attitudes and passive resistance; the individual habitually resents, opposes, and covertly obstructs demands to fulfill obligations and appropriate expectations. This is a proposed diagnosis by the DSM-IV.