negligence
கருத்தின்மை, கவனக் குறைவு, கவனக்குறைவு, அசட்டையாயிருத்தல், கருதாப்பிழை, கவனயீனம், புறக்கணிப்பு, கருத்தின்மை, கவனக்குறைவு, கவனிப்புக்குறைபாடு, பேணிப்பாராக் குறை, புறக்கணிப்பு அலட்சியம்
தமிழ் விளக்கம்
அலட்சியம் (carelessness or negligence) என்பது சில விளைவுகளை முன்னறிந்திருப்பினும் அவற்றைப் பற்றி சற்றும் கவலைப்படாத உணர்வு. மற்றவர்களுக்குத் தீங்கோ, இடர்ப்பாடுகளோ ஏற்படலாம் என்று தெரிந்திருந்தும், போதுமான கவனத்துடனோ எச்சரிக்கையுடனோ ஒரு செயலை செய்யத் தவறுவது. தன்னால் பாதுகாக்கப்பட வேண்டியவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யத் தவறுவது. இது பெரும்பாலும் ஆபத்தான பல அசம்பாவிதங்களையும் விபத்துக்களையும் உண்டாக்கி விடும். அலட்சியப்போக்கு என்பது ஒரு நபர் செய்ய்யவேண்டிய கடமைகளை செய்யத் தவறுவது. தன்னுடைய அலட்சியத்தால் பாதிக்கப்பட உள்ளார் என்று தெரிந்திருந்தும், அவருக்கு போதுமான எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் கூட விளவுகளுக்குப் பொறுப்பேற்காத கவனமின்மையைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக, ஒருவருடைய புறக்கணிப்பால் குழந்தை ஒன்றுக்கு தீங்கு விளைந்தது என்று உரிய அதிகாரிகளிடம் சமூகப்பணியாளர் தகவல் தெரிவிக்காமல் இருந்தால் அதுவும் விளைவுகளுக்குப் பொறுப்பேற்காத அலட்சியமின்மை என்றே கருதப்படும். பிறருக்குக் காயம் ஏற்படும்படியாகவோ அல்லது மரணம் சம்பவிக்கும் படியாக நடந்து கொள்வது குற்றவியல் ரீதியான கவனமின்மை என்று கருதப்படும்
English
Failure to exercise reasonable care or caution, resulting in others' being subjected to harm or unwarranted risk of harm; also, failure to fulfill responsibility that is necessary to protect or help another. Contributory negligence may occur when a person's failure to exercise prudent caution, combined with the negligence of another, results in harm to a third individual. For example, if a social worker does not report knowledge about a person's neglect of a child who has been harmed, the social worker could be charged with contributory negligence. Criminal (or culpable) negligence may occur when one is so reckless, careless, or indifferent to others' safety that injury or death results.