negotiation

ஒப்பந்தம் செய்யும் நோக்குடன் கூடிக் கலந்து பேசுதல்

தமிழ் விளக்கம்

சமுதாய அமைப்புப் பணியிலும், பிற சமூகப்பணி முறைகளிலும், முரண்பாடான எதிர்பார்ப்புகளைக் கொண்ட இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட தரப்பினரையோ ஒன்றுகூட்டி, அவர்களுடைய எதிர்பார்ப்புகளை எடுத்துரைக்க வாய்ப்பளித்து, அவர்களின் எதிர்பார்ப்புகளின் சாதக பாதகங்களை உணரவைத்து, எல்லாத்தரப்பினரும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளும் படியான கருத்து நிலையை அடைய உதவும் நடைமுறை.

English

In community organization and other forms of social work, the process of bringing together those who are opposed on some issues and arranging for them to communicate clearly and fairly, to bargain and compromise, and to arrive at mutually acceptable agreements.