neighborhood
சுற்றுப்புறம், அருகிடம், அக்கம்பக்கம், பேட்டை
தமிழ் விளக்கம்
Neighbourhood என்ற ஆங்கில வார்த்தைக்கு அருகாமையில் வசிப்பவர் என்று பொருள் இருந்தாலும், திருப்தியான சமூகவியல் விளக்கம் இதுவரை கொடுக்கப்படவில்லை. அது நகரம், நகர்ப்புற விரிவாக்கப்பகுதி, கிராமம் போன்ற வாழிடங்களுக்குள் தனித்துவமான அம்சங்களைக்கொண்ட, இட அடையாளத்துடன் குறிக்கப்படும் வாழிடமாகக் கருதப்படுகிறது. இந்த வாழிடச் சமூகங்களில் வாழும் மக்களில் கணிசமானவர்கள் ஒருவருக்கொருவர் நேரடியான பரிச்சயம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட இடப்பரப்பில் செயல்படுவதால் ஏற்படும் பயன்பாட்டு ரீதியான சமூகத் தொடர்புகளை neighbourhood எனலாம். ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழ்வதால், ஏற்படும் நேரடியான பரிச்சயத்தால் உருவாகும் சமூகத் தொடர்புகள் மூலம், வாழ்க்கை முறைகளிலும், மதிப்பீடுகளிலும், பரஸ்பர விருப்பங்களிலும் கருத்தொற்றுமையைப் பகிர்ந்து கொள்பவர்களாக இருக்கும் மனிதக்குழுவை neighbourhood எனலாம்..
English
A region or locality whose inhabitants share certain characteristics, values, mutual interests, or styles of living.