neighborhood information center

அருகிடங்களுக்கான / குடியிருப்புகளுக்கான தகவல் மையங்கள்

தமிழ் விளக்கம்

இங்கிலாந்தில் செயல்பட்டுவரும் பொதுமக்கள் ஆலோசனை மையங்கள் போன்று அமெரிக்காவில் செயல்படும் குடியிருப்பவர்களுக்கான தகவல் மையங்கள். ஒரு குடியிருப்புக்கு அருகாமையிலுள்ள, அக்குடியிருப்போடு பரிச்சயமான நிறுவனம் அக்குடியிருப்பிலுள்ளவர்களுக்குத் தேவையான தகவல் சேவைகளை தந்துதவ முன்வரலாம். அதாவது Yellow Pages போன்ற தகவல்கள். அக்குடியிருப்பைப் பற்றிய அனைத்துத் தகவல்களைச் சேகரித்து, தொகுத்து, தேவைப்படுவோர்களுக்கு ஏற்றபடி தந்துதவுவது. இந்த மையங்கள் பெரும்பாலும் நேரடிச் சேவையில் ஈடுபடாது. இம்மையங்கள் அஞ்சலகங்கள், நூலகங்கள், வணிக வளாகங்களில் செயல்பட்டாலும், தனித்தியங்கும், சுதந்திர அமைப்புக்கள்.

English

A social program, similar to the British Citizen's Advice Bureaus (CABs), in which highly accessible and geographically convenient organizations are used as entry points to the total social services system. They would provide information, advice, and referrals but would not replace the intake evaluation function of social agencies. The centers can be freestanding or located in post offices, libraries, municipal buildings, and shopping centers.