neo-Freudian
நவ பிராய்டியர்கள், புதிய பிராய்டியர்கள்
தமிழ் விளக்கம்
பிராய்டின் உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டின்படி, இயல்புணர்ச்சிகளே (instincts) மனிதனை ஆட்டிப்படைப்பதாகவும், இதன் மையமாக பாலுணர்ச்சி இருப்பதாகவும் அனுமானித்து, பாலியல் உணர்வுகளை மையமாகக் கொண்டு, மனிதனையும் மனிதவாழ்வையும் சிக்மண்ட் பிராய்ட் விசாரணை செய்தார். பிராய்டடின் தேடுதல் மனிதனின் முழுமையான முகத்தைக் காட்டவில்லை என்றும், மனிதனை ஒரு சமூகப்பிறவியாக, சமூக உறவுகளால் பிணைக்கப்பட்டு, சமூக வாழ்வியக்கத்தால் உருவாக்கப்படுபவனாக அவர் பார்க்கத் தவறியாதக, உளப்பகுப்பாய்வு கோட்பாட்டைச் சமூக கலாச்சாரப் பின்னணியில் அணுகியவர்கள் புதிய பிராய்டியர்கள். பாலுணர்வை மையமாக வைத்து ப்ராய்ட் சித்தரித்துக்காட்டும் ஆசை உலகத்தின் (Realm of desire) நிர்ப்பந்தங்களைக் காட்டிலும், மனிதனின் உயிர்வாழ்வை நிர்ணயிக்கும் இன்னொரு உலகமும் இருக்கிறது. அதுதான் தேவை உலகம் (Realm of needs). அதுவும் பசி ,பட்டினி, போர், அவலம், இடப்பெயர்வு, விடுதலை என்று அல்லலுற்றுப் போராடும் மனிதர்களிடம் உளப்பகுப்பாய்வு பொருத்தமற்றதென்று இவர்கள் எடுத்துரைத்தனர். இவர்கள் ஒருவரல்ல. பலர். இவர்கள் ஒவ்வொருவரும் பிராய்டின் ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு அதை மேலும் விரித்தும், மறுத்தும் ஆய்வு செய்து விவாதங்களை முன்வைத்தனர். அவர்களில் முக்கியமானவர்கள் ஹாரி ஸ்டேக் சல்லிவன், (Harry Stack Sullivan), கரேன் ஹோர்நே (Karen Horney), ஆல்பிரட் அட்லர் (Alfred Adler), மற்றும் எரிக் ஃப்ரம் (Erich Fromm).
English
A theoretical orientation that basically follows Freudian theory but puts greater emphasis on sociocultural factors, interpersonal relationships, and psychosocial development into and through adulthood. There is no single neo-Freudian school, because those who have been given this designation also diverge from one another. However, leading neo-Freudians include Harry Stack Sullivan, Karen Horney, Alfred Adler, and Erich Fromm.