neoconservatism

நவ பழமை பேண்வாதம்

தமிழ் விளக்கம்

பழமை வாதம் என்பது பாரம்பரியமாகப் பின்பற்றி வரும் நடைமுறைகளும், பழக்கங்களும் சிறப்பானவையென்றும், அவைகளை மாற்றலாகாது என்னும் அரசியல் சமூகக் கோட்பாடு. நவ பழைமை பேண்வாதம் என்பது பழமை வாதத்தின் எல்லா அம்ஸங்களையும் ஏற்காவிட்டாலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகள் சிலவற்றில் அதிகமான அரசுத் தலையீடுகள் இருக்கவேண்டுமென வற்புறுத்திய அரசியல் கோட்பாடு. நவ பழமைவாதம் என்பது ஒற்றைப்படையான கோட்பாடல்ல. அதிலும் வெவ்வேறு கருத்துநிலைகள் உள்ளன. நவீன பழமை வாதம் என்பது சமூக வாழ்க்கையில் கலாச்சாரக் கட்டுப்பாடுகளும், பொருளாதார வளர்ச்சிக்கு தனியாருக்குச் சலுகைகளும் மானியங்களும் அரசு வழங்கவேண்டுமென்று வற்புறுத்தியது. அதே நேரத்தில் அரசு என்பது குறைந்த அளவில்தான் எதிலும் தலையிடவேண்டுமென்ற பழமைவாதக் கோட்பாட்டை நிராகரித்தது.

English

A revision of certain aspects of traditional conservative philosophies and views that retains most other aspects of these views. Thus, there are many neoconservative philosophies rather than a single one. The term is often applied to an attitude that favors more controls on morality and financial incentives and subsidies to businesses to encourage their growth, rejecting the traditional conservative view that government should be unobtrusive and minimal. See also conservatism.