neonatal withdrawal syndrome

பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் தவிர்ப்பு அறிகுறிகள்

தமிழ் விளக்கம்

கருவுற்ற தாய்மார்கள் தங்களுடைய கர்ப்பகாலத்தில் ஒபியம் மற்றும் பிற போதை மருந்துப் பழக்கத்திற்கு அடிமையாயிருந்தால், போதையின் தன்மை நஞ்சுக்கொடி வழியாக குழந்தையைச் சென்றடைந்து கருவிலுள்ள குழந்தைக்கும் பழக்கமாகிவிடும். பிறந்த பிறகு குழந்தைக்கு அந்தப் போதை கிடைக்காததால், பெரியவர்களுக்கு ஏற்படும் போதை விலக்கல் அறிகுறிகளைப் போன்று உடல் நடுக்கம், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, தூக்கமின்மை, சீரற்ற மூச்சு, தொடர் அழுகை போன்ற அறிகுறிகள் தோன்றும்.

English

Symptoms revealed by newborns indicating drug addiction that began in utero. The symptoms include spontaneous body tremors, arrhythmia, insomnia, and abnormal breathing patterns.