nervous breakdown

நரம்புத்தளர்ச்சி

தமிழ் விளக்கம்

நரம்புத்தளர்ச்சி என்பது தெளிவற்ற பல அர்த்தங்களில் உப்யோகப்படுத்தப்படும் வார்த்தை. நரம்புத்தளர்ச்சி என்பது சரியான வார்த்தை என்று சொல்ல முடியாது. நரம்புகள் தளர்வது கிடையாது. நம் மூளை விடுக்கும் கட்டளைகளை, மூளையிலிருந்து செய்திகளாக எடுத்துச் செல்லும் கம்பிகளாகச் செயல்படுவது தான் நரம்புகள். மயலின் -Myelin- என்னும் வேதிப்பொருள் சூழ்ந்த லட்சக்கணக்கான சிறிய நரம்புகள் ஒன்றாகி பெரிய நரம்பாக தசைகளுக்குள் ஊடுருவி இருக்கும். எப்பொழுதெல்லாம் மூளையின் கட்டளைகள் பெரிய நரம்புகளுக்குப் போய்ச் சேருவதில் தொய்வு ஏற்படுகிறதோ, அதை நரம்புத் தளர்ச்சி என்கிறோம். இது Neurasthenia, nervousness, nervosism எனப் பலவகையாகச் சொல்லப்படுகிறது. அதாவது மூளை அனுப்பும் செய்திகள் விரைவாக உடலின் மற்றைய பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்படுவதில் தடை அல்லது தாமதம் ஏற்படும் போது, கை நடுக்கம் போன்ற குறைபாடுகள் ஏற்படுகின்றன. நரம்புக் கலன்கள் -Nerve cells- myelin என்ற வேதிப் பொருள் பகுதிகளால் சூழப்பட்டிருக்கும். இதற்கிடைப்பட்ட பகுதிகள் கணு -nodes- எனச் சொல்லப்படுகிறது. மூளை, முதுகுத்தண்டில் -spinal cord- உள்ள நரம்புகள் ஊடாக செய்திகளை, கட்டளைகளை அனுப்பும் போது, அந்தத் துடிப்புகள் ஒரு கணுவில் இருந்து -node- அடுத்த கணுவிற்கு -node- தாவிச் செல்கின்றன. மயிலின் என்ற வேதிப்பொருள் தாவிச் செல்லும் துடிப்புகள் வெளியேறாமல் அல்லது தவறிச் செல்லாமல் தடுக்கிறது. இதில் ஏற்படும் தொய்வே நரம்புத் தளர்ச்சி எனப்படுகிறது. பொதுவாக வலி, உணர்வின்மை, கவலை, மன அழுத்தம், சோர்வு, கை நடுக்கம், கவனம் செலுத்துவதில் சிரமம், குமட்டல், பதட்டம், மிகை இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, களைப்பு, தூக்கமின்மை (Insomnia ), உடல் சோர்வாக காணப்படுதல். தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் தென்படும். சிலர் அழுவதும், சிரிப்பதும், பைத்தியம் போல் நடப்பதும் உண்டு.

English

An imprecise lay term that carries many meanings, usually having to do with any emotional condition that has resulted in hospitalization or severe emotional disability interfering with normal functioning. Social workers or other professionals do not use this term in professional communications.