networking

பிணையப்படுத்தல், தொடர்புண்டாக்குதல்

தமிழ் விளக்கம்

இது பலதுறைகளில் பயன்படும் சொல்லாடல் என்றாலும், பொருள் ஒற்றுமை கொண்டது. ஒன்றையொன்று தொடர்புபடுத்தி ஒரு ஒருங்கியத்திற்குக் கொண்டுவரும் பொதுப் பொருளிலே பயன்படுத்தப்படுகிறது. 1.சமூகப்பணியில், சமூகப்பணியாளர், தன்னுடைய வாடிக்கையாளருக்கு இயல்பாக அமைந்திருக்கும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சுற்றுப்புறத்தாரோடு இருக்கும் தொடர்பு முறைகளைப் பகுப்பாய்வு செய்து, அதன் ஆதரவுத் தன்மை என்ன, என்னமாதிரியான தொடர்புகள் வாடிக்கையாளருக்கு ஆதரவாக அமைய முடியும், ஒவ்வொரு தொடர்பையும் பிறிதொன்றில் இணைத்து ஒருங்கியக்கி, வலிமையாக்கி அதன்மூலம் வாடிக்கையாளரின் பிரச்சனைகளைத் தீர்க்க உதவுவது பற்றிய அணுகுமுறை. 2. பல்வேறு நிபுணத்துவத்தைச் சார்ந்தவர்கள் தங்களுக்குள் தொடர்புகளை உருவாக்கி, தங்களுடைய இலக்குகளை விரைவாக முடிக்க முயல்வது.

English

1. The social worker's efforts to enhance and develop the social linkages that might exist between the client and those relevant to the client, such as family members, friends, neighbors, and associates. These efforts include strengthening the supportive quality of existing networks, establishing new ones, creating linkages among the various networks to promote more competent support, and mobilizing these networks on behalf of the client. Within the network are people who can be effective resources in helping to achieve the client's goals. 2. The relationships professionals cultivate with other professionals to expedite action through the social system.