neurolinguistic programming (NLP)

புலன் மொழித்திட்டம்

தமிழ் விளக்கம்

ரிச்சர்ட் பந்த்லர் மற்றும் ஜான் கிறைந்தர் (Richard Bandler & John Grinder) என்பவர்களால் உருவாக்கப்பட்டு, சமூகப்பணியாளர்கள், உளப்பிணி மருத்துவர்கள், கல்வியாளர்கள், நிர்வாகிகள் என்று அனைத்துத் தரப்பினராலும், தாங்கள் தொடர்பு கொள்பவர்களிடம் புரிதலை வளர்த்துக் கொள்வதற்கும், ஒத்துணர்வை வளர்ப்பதற்கும் (build rapport), அவர்களுக்கு உதவுவதற்கும் ஏற்றவாறு அவர்களின் நடத்தைகள் பற்றிய புரிதலை வளர்த்துக் கொள்ள உதவிய நடைமுறை / உத்தி. NLP என்பது மூன்று கருத்துக்களால் கட்டமைக்கப்பட்டது. நியூரோ என்பது மனதையும், அதன் இயக்கத்தையும் குறிக்கிறது. பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், முகர்தல் என்ற ஐந்து புலன்களால் நமக்குக் கிடைக்கும் செய்திகளை நரம்புகள் மூளைக்கு எடுத்துச் சென்று அனுபவங்களாக்கி எண்ணங்களை உருவாக்குகிறது. அனுபவங்கள் எண்ணங்கள் என்பது நரம்புகள் மற்றும் மூளையின் செயல்பாட்டைப் பொறுத்தே அமைவதால் அதைக் குறிக்கும் விதமாக நியூரோ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.
லிங்விஸ்டிக் என்பது, நமது அனுபவத்தை எப்படி மொழியைப் பயன்படுத்தி பிறரோடு தொடர்பு கொள்கிறோம் என்பதைக் குறிக்கிறது. நமது சொற்பிரயோகம் எந்த அளவிற்கு நமது அனுபவத்தை சரியாகப் பிரதிபலிக்கின்றது அல்லது மற்றவர்களின் அனுபவங்களைப் புரிந்துகொள்ள உதவுகிறது எனபதைக் குறிக்க லிங்விஸ்டிக் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.
’ப்ரொக்ரமிங்’ என்பது அனுபவத்தை மொழிப்படுத்தி, நடத்தை மூலம் வெளிப்படுத்தும் முறையைக் குறிக்கிறது. ஒன்றைப் புலன்கள் மூலம் புரிந்துகொள்ளும் விதம், அதை மொழியின் மூலம் வெளிப்படுத்தும் பாங்கு, அதைக்கொண்டு முடிவெடுக்கும் பாங்கு, பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் முறை அல்லது வழிமுறையைக் குறிக்க ’ப்ரொக்ரமிங்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.
சுருக்கமாகச் சொன்னால், நியூரோ என்பது சிந்தனை, லிங்விஸ்டிக் என்பது சொல், ப்ரொக்ரமிங் என்பது செயல். வெளி உலகிலிருந்து தகவல்கள் புலன்கள் மூலம் உள்ளே நுழைந்து மூளையைச் சென்றடைகின்றன. அங்கு அவைகள் அறியப்பட்டு, சொல்லுக்கு, செயலுக்கு வித்திடப்படுகின்றன. புலன்களால் அறியப்பட்டு மொழியப்படுவதால் என்.எல்.பி-யை “ஐம்புலஅறிவு” என்றும் சொல்லலாம். அல்லது புலன்மொழித்திட்டம் என்று சொல்லலாம்.

English

A communications model of human behavior developed by Richard Bandler and John Grinder and others and used by social workers and other psychosocial therapists, educators, and business personnel to assess, build rapport with, and help clients. Major components of the model are "neuro" (the processing of information perceived through the five senses by the nervous system); "linguistic" (the systems of verbal and nonverbal communication that organize the neural representations into meaningful data); and "programming" (the ability to organize the neurolinguistic systems to achieve specific outcomes). To assess someone's behavior, the NLP counselor must identify the way the client understands information. The International Association of Neurolinguistic Programming (IANLP) was formed in 1983.