neurosis

நரம்புச்சிக்கலால் ஏற்படும் உடல்நிலைக் கோளாறு, முளை நுண்ம அமைதிக்கோளாறு, இளம் மனநோய், உளக்கோளாறு, உளவழி நரம்பு நோய்

தமிழ் விளக்கம்

மனக் குழப்பம் மற்றும் பதட்டத்தின் விளைவாகத் தோன்றுகின்ற பல்வேறு வகையான மனக்கோளாறுகளான பதட்டம், சிடுசிடுப்பு, எரிச்சல், உடல்சோர்வு மற்றும் காரணமற்ற உடலுபாதைகளைக் குறிக்கும் சொல். ஒருவர் தன்னுடைய மனக்குழப்பத்தைச் சரியாகக் கையாளத் தெரியாததால் ஏற்படும் விளைவு. இதன் அறிகுறிகளின் தாக்கம் தாங்கிக் கொள்ளக்கூடியதாகவோ அல்லது சிகிச்சை தேவைப்படுகிற அளவு கடுமையானதாகவோ இருக்கலாம். பெரும்பாலான அறிகுறிகளை உளப்பிணி சிகிச்சையால் தீர்க்கமுடியும்.

English

A term pertaining to a group of mental disorders that are characterized by persistent and disturbing symptoms of anxiety, such as nervousness, irritability, and somatic complaints. The anxiety is said to be a maladaptive way of dealing with internal conflict. The symptoms can range from mild to severe but are relatively amenable to psychotherapy.