neurotransmitters
நியூரோ டரான்ஸ்மிட்டர்ஸ்
தமிழ் விளக்கம்
நியூரோ டரான்ஸ்மிட்டர்ஸ் என்பது மனித உடலில் சுரக்கும் ஒருவகையான அகச்சுரப்பி இரசாயனங்கள். அகச்சுரப்பித் தொகுதி நரம்புத் தொகுதியைப் போல ஒரு தகவல் சைகைத் தொகுதியாகும். நரம்புத் தொகுதி தகவல்களை அனுப்புவதற்கு நரம்புகளைப் பயன்படுத்துகின்றது, ஆனால், அகச்சுரப்பித் தொகுதி சுரக்கும் இரசாயனங்கள் தகவல்களை அனுப்புவதற்குப் பெரும்பாலும் குருதியில் தங்கியுள்ளது. நியூரோ டரான்ஸ்மிட்டர்ஸ் இரசாயனங்கள் நரம்பிணைப்புகளில் உள்ள சிறு கொப்புளங்கலிருந்து வெளியிடப்பட்டு ஒரு நரம்பிணைப்பிலிருந்து தகவல்களை இன்னொரு நரம்பிணைப்பிற்கு கடத்துகிறது. நாம் உண்ணும் உணவிலுள்ள அமினோ அமிலங்கள் உயிரியல் மாற்றம் பெற்று, பலவகையான நியூரோ டரான்ஸ்மிட்டர்ஸாக உருவாகிறது. பொதுவான சில நியூரோ டரான்ஸ்மிட்டர்ஸ் அட்ரினலின் (Adrenalin), டோபமைன் (Dopamine) செரோடோனின் (Serotonin), ஆக்ஸிடாஸின் (Oxytocin) வாசோபிரசின் (Vasopressin). நியூரோ டரான்ஸ்மிட்டர்ஸ்கள் நம் அன்றாட வாழ்க்கையைப் பெருமளவு கட்டமைக்கின்றது. எத்தனை வகையான நியூரோ டரான்ஸ்மிட்டர்ஸ் இருக்கின்றது என்று இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை என்றாலும், 100 க்கும் அதிகமான இரசாயனத் தூதர்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
பார்க்க: கேட்டகாலமின் - நரம்பு செல்களுக்கிடையே தகவல் பரிமாற்றத்திற்கு உதவும் உயிர் வேதிப் பொருள் - இதன் மாறும் அளவுகள் மன அழுத்தம், மனச்சிதைவு நோய்களுக்குக் காரணமாகலாம் என்று கருதப்படுகின்றது.
பார்க்க: கேட்டகாலமின் - நரம்பு செல்களுக்கிடையே தகவல் பரிமாற்றத்திற்கு உதவும் உயிர் வேதிப் பொருள் - இதன் மாறும் அளவுகள் மன அழுத்தம், மனச்சிதைவு நோய்களுக்குக் காரணமாகலாம் என்று கருதப்படுகின்றது.
English
See catech olamines.