New Community Development Office (NCDO)

புதிய சமுதாய மேம்பாட்டு அலுவலகம்

தமிழ் விளக்கம்

அமெரிக்க அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒரு நிர்வாக அங்கம். புதிய வீட்டுவசதித் திட்டங்கள், புதிய நகர் உருவாக்கம், புதிய குடியிருப்புகள் உருவாக்கும் போதும், வீட்டு வசதிக்கான கட்டுமானங்களைத் திட்டமிடும் போதும், அது தேசிய வீட்டுவசதி மற்றும் சுற்றுச் சூழல் சட்டங்களுக்கு, விதிமுறைகளுக்கு ஒப்ப இருப்பதோடு மட்டுமல்ல, அங்கு குடியிருப்பவர்களின் சமூக உளவியல் தேவைகளை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டுமென்பதை இந்த அலுவலகம் கண்காணித்தது.

English

An organization within the U.S. Department of Housing and Urban Development (DHUD) to assure that the planning and building of new neighborhoods, cities, and housing infrastructures are in compliance with national housing and environmental laws and encourages these communities to provide for the human needs of its residents.