New Deal
புதிய ஒப்பந்தம்
தமிழ் விளக்கம்
அமெரிக்காவில் 1930 களில் ஏற்பட்ட பொருளாதார பெருமந்தத்தைச் சமாளிக்க எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள், திட்டங்கள், சட்டங்கள் போன்ற பலமுயற்சிகளைக் குறிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் பயன்படுத்திய சொல்லாடல். புதிய ஒப்பந்தத்தில் சமூகப் பாதுகாப்புச் சட்டங்கள், (Social Security Act), அமெரிக்க அரசின் அவசரகால நிவாரண நிர்வாகம் (Federal Emergency Relief Administration (FERA), இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான மக்கள் பாதுகாப்புக்குழு, (குடிமுறைப் பாதுகாப்புக் குழு (குடி மராமத்து) / குடிமுறைப் பாதுகாப்புத் தொண்டரணி (குடி மராமத்து) (Conservation Corps (CCC), வேலை முன்னேற்றத்திற்கான அலுவலகம் (Works Progress Administration (WPA), ஊரக மின்மயமாக்கல் (rural electrification), வங்கிகள் மற்றும் பங்குப் பரிவர்த்தனை தொடர்பான கட்டுப்பாடுச் சட்டங்கள் (legislation that regulated banking and securities practices), பண்ணை மேலாண்மை (farm management), மற்றும் வேலைவாய்ப்பகங்கள் (unemployment exchanges) போன்ற பல்வேறு முயற்சிகளுக்கு புதிய ஒப்பந்தம் வித்திட்டன.
English
President Franklin D. Roosevelt's name for the plans, programs, and legislation enacted during his first administration in response to the Great Depression. New Deal programs included the Social Security Act; Federal Emergency Relief Administration (FERA); Civilian Conservation Corps (CCC); Works Progress Administration (WPA); rural electrification; and legislation that regulated banking and securities practices, farm management, and unemployment exchanges.