new federalism
புதிய கூட்டாச்சி
தமிழ் விளக்கம்
பலதரப்பட்ட அரசியல் சமூகங்களை ஒரு பொது அரச கட்டமைப்பில், அச்சமூகங்களின் பொதுத் தேவைகளை நிறைவு செய்வதற்காக உருவாக்கப்படும் அரசாட்சி முறையே (government sytem) கூட்டாட்சி (சமஷ்டி - Federal system) ஆகும். கூட்டாட்சி முறையில் அமைக்கப்படும் அரசு கூட்டரசு எனப்படும். கூட்டாட்சியில் பொதுத் தேவைகளுக்காக ஒரு பொது அரச கட்டமைப்பும், அந்தக் கூட்டமைப்பில் சேர்ந்துள்ள தனித்துவ அரசியல் சமூகங்களுக்காக உள்ளூர் அல்லது மாகாண அல்லது மாநில அரச கட்டமைப்புக்களும் இருக்கும். கூட்டரசு உருவாக்கப்படும் பொழுது ஏற்றுக்கொள்ளப்படும் அரசியலமைப்புச் சட்டம், கூட்டரசுக்கும் உள்ளூர் அரசுகளுக்குமிடையே இருக்கும் உறவுகளையும், கடமைகளையும், உரிமைகளையும் விவரித்து இரண்டு அம்சங்களுக்கிடையான சட்ட ஆக்க அதிகாரப் பங்கீடுகளையும் விவரிக்கும். இந்தியா, கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் கூட்டாட்சி அரசுகளுக்கு எடுத்துக்காட்டுக்கள் ஆகும். இது தவிர, பல நாடுகள் ஒன்று சேர்ந்து ஒரு புதிய நாட்டினை அமைக்கும் முறையையும் கூட்டரசு எனலாம். (ஆமில்டன்)
நாட்டு ஒற்றுமையையும், அதிகாரத்தினையும் மாநில உரிமைகளின் பாதுகாப்பினையும் பொருந்தச் செய்யும் அரசியல் வழிமுறையே கூட்டாட்சி முறையாகும். - பேராசிரியர் டைசி.
கூட்டாட்சி, கூட்டரசு முறையை ஆங்கிலத்தில் பெடரலிசம் (Federalism) என்பர். இச்சொல் நட்பு என்னும் பொருள் தரும் பேடசு (foedu) என்னும் இலத்தீன் சொல்லிலிருந்து பிறந்ததாகும். நட்புறவான கூட்டு ஒப்பந்தம் அல்லது உடன்படிக்கை எனப் பொருள்படும். கூட்டாட்சி அரசியலமைப்பு அண்மைக்காலமாக அதிகளவில் பேசப்படுகின்ற ஒரு ஆட்சிமுறையாகும் என்றாலும் கிரேக்கத்தின் நகர அரசுகளிலும் இனங்காணப்படுமளவிற்கு பழமைவாய்ந்த ஒன்றாகும். 1787 ஆம் ஆண்டு அமெரிக்க அரசியலமைப்பில் இம்முறை அறிமுகம் செய்யப்பட்டதுடன் புதியதொரு வளர்முகத்தை அடைந்தது எனலாம். அமெரிக்கக் கூட்டுநாடுகளின் அரசியல் அமைப்பு உலகின் முதன்முதலாக எழுதப்பட்ட சட்டமாகக் கருதப்படுகின்றது. எனவே கூட்டரசு முறையின் தொடக்கமாக 18 ஆம் நூற்றாண்டும், அறிமுக நாடாக அமெரிக்கக் கூட்டுநாடுகள் என்னும் ஐக்கிய அமெரிக்காவும் கருதப்படுகிறது.

English
A revision of the traditional federalist ideology (a national government sharing power with states and regions over specifically delineated functions, such as welfare and education), which generally advocates reduced national spending, federal taxation, and federal responsibility and commensurately more of these at the state level. This term was used by the Reagan administration to describe some of its policies.