new property
புதிய சொத்து
தமிழ் விளக்கம்
புதிய சொத்து என்பது ஒருவர் புதிதாக வாங்கிய உடமைகளைக் குறிக்குமென்றாலும், சமூக நலக் கண்ணோட்டத்தில் அது சமூக வசதிகளைக் குறிக்கும். அது ஒரு குடியிருப்புப் பகுதியில் பொதுவாகக் கிடைக்கும் சில சேவைகள், சில ஆதாரங்கள் மற்றும் உத்தரவாதமான உடமைகளைக் குறிக்கும். சமூகத் திட்டமிடுபவர்கள் மற்றும் பொருளியலாளர்கள் இதை ஓரிடத்திலிருப்பதால், வாழ்வதால் அடையத்தகுந்த சமூக வருமானம் (social wage) அல்லது புதிய அனுகூலம் (new income) என்கின்றனர். இந்த அனுகூலத்தைப்பெற உழைப்பு தேவைப்படாவிட்டாலும், அது அம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை நிரணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
English
The guaranteed assets, services, and resources that are available to a resident of a jurisdiction. Also known as the "social wage," the "new income," and entitlement programs, these assets are seen by social planners and economists as being as important in considering an individual's standard of living as income from work or assets from unearned income.