new religious movements (NRMs)

புதிய மத இயக்கங்கள்

தமிழ் விளக்கம்

பாரம்பரிய மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய சமயங்களின் தத்துவார்த்த அடிப்படைகளைக் கொண்டு, மதச் சார்பற்ற கலாச்சாரத்தையும், புதுயுகக் கலாச்சார வடிவங்களையும் தாங்கி, 1960 களில் உருவாகி, உலகெங்கும் பரவிய குழுக்கள், இயக்கங்கள். அப்படி உருவான சில இயக்கங்கள் ஒருங்கிணைப்பு திருச்சபை (Unification Church), தெய்வீக தரிசன இயக்கம் (Divine Light Mission,) மகரிஷி மகேஷ் யோகி அவர்களின் ஆன்மீக மறுமலர்ச்சி இயக்கம் (Spiritual Regeneration Movement) ஓஷோ இயக்கம் (Rajneesh Foundation), ஹரே கிருஷ்ணா இயக்கம், (Krishna Consciousness), மற்றும் Synanon, and Scientology. இவர்கள் சமய மரபு வெறியர்கள் (Cult) போன்ற மனோபாவத்துடன் நடந்துகொண்டாலும், அந்த வார்த்தையிலிருந்த எதிர்மறைத் தன்மையைப் போக்க, தாங்கள் புதிய சமயத்தினர் என்றே அழைக்கப்பட விரும்பினார்கள்.

English

Groups and philosophies that emerged, especially since the 1960s, that may include some of the ideologies and formats of traditional Western and Eastern religions and elements of modern secular culture. Some organizations referred to as NRMs include the Unification Church, Divine Light Mission, Rajneesh Foundation, Krishna Consciousness, Synanon, and Scientology. Some prefer the term NRM to "cult" because of that term's negative connotations.