nicotine dependence
நிகோடின் சார்புத்தன்மை, புகையிலைப் பழக்கம்
தமிழ் விளக்கம்
புகையிலை, நிக்கொட்டீனா என்னும் பேரினத்தைச் சேர்ந்த தாவரத்தின் இலைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. நிக்கொட்டீனா பேரினத்துள் அடங்கும் பல புகையிலை இனங்கள் உண்டு. இப் பேரினத்தின் பெயர் போர்த்துக்கல் நாட்டுக்கான பிரான்ஸ் தூதுவரான ஜான் நிக்கொட் என்பவரைக் கௌரவிப்பதற்காக இடப்பட்டது. புகைபிடித்தல் அல்லது புகைப்பழக்கம் என்பது புகையிலை எரிக்கப்பட்டோ அல்லது மெல்லப்பட்டோ அதன் புகையோ, சாறோ சுவைக்கப்படும் அல்லது உள்ளிழுக்கப்படும் செயலாகும். புகையிலையில் உள்ள வேதிப்பொருட்கள், இரத்த அழுத்தம், நினைவாற்றல், உஷார்நிலை மற்றும் எதிர்வினை நேரத்தை உயரச்செய்கின்ற நரம்பு நுனிகளில் இரசாயன எதிர்வினைகளைத் தூண்டுகின்றன. இதனால் டோபமைன் மற்றும் எண்டோர்பின் வெளியிடப்படுகிறது, இந்த அகசுரப்பி இரசாயனங்கள் மகிழ்ச்சியோடு தொடர்புகொண்டவை. புகையிலைப் பழக்கம் மற்ற போதைப் பழக்கங்களோடு ஒப்பிடுகையில் மனப்பிறழ்வை உண்டாக்காதெனினும், இது பல்வேறு வகையான நோய்களுக்கு, மூச்சுக்குழாய் அழற்சி (bronchitis), நுரையீரல் வளிப்பை வீக்கம் (emphysema), இதய நாடி (இரத்தக்குழாய்கள்) நோய்கள் (coronary artery disease), இரத்தக்குழாய் நோய்கள் (peripheral vascular disease), மற்றும் பலவகையான புற்றுநோய்கள் உருவாகக் காரணமாக அமைகின்றன.
English
A psychoactive substance abuse disorder whose effect occurs primarily through inhaling the smoke of burning tobacco or ingesting chewed tobacco. Even though the disorder has no social impairment or intoxication, it is significantly related to such physical diseases as bronchitis, emphysema, coronary artery disease, peripheral vascular disease, and various forms of cancer.