nicotine-related disorders
நிகோடினால் உருவாகும் கோளாறுகள்
தமிழ் விளக்கம்
புகையிலையில் உள்ள நிகோட்டின் ஒருவகையான உள ஊக்கி. ஆகையால புகையிலையைத் தொடர்ந்து சிகரெட், மெல்லும் புகையிலை, மூக்குப்பொடி, சுருட்டு என்று எந்த வகையில் பயன்படுத்தினாலும், அதை விலக்கினாலும் கோளாறுகள் ஏற்படும். புகையிலையைத் தொடர்ந்து பயன்படுத்தினால் பல்வேறு வகையான நோய்களுக்கு, மூச்சுக்குழாய் அழற்சி (bronchitis), நுரையீரல் வளிப்பை வீக்கம் (emphysema), இதய நாடி (இரத்தக்குழாய்கள்) நோய்கள் (coronary artery disease), இரத்தக்குழாய் நோய்கள் (peripheral vascular disease), மற்றும் பலவகையான புற்றுநோய்கள் உருவாகக் காரணமாக அமைகின்றன. புகையிலைலிருந்து விலக நினைத்தால் மன அழுத்தம், தூக்கமின்மை, எரிச்சல், கவனம் செலுத்துவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தோன்றும். புகையிலைக்கான ஏக்கமே, அது ஆரோக்கியத்தைச் சீரழிக்கும் என்று தெரிந்திருந்தும் பலரை அதிலிருந்து விடுபடமுடியாமல் செய்கிறது.
English
The resulting substance dependence and withdrawal symptoms that commonly occur through the use of nicotine, the psychoactive ingredient in tobacco. These disorders can develop with use of all forms of tobacco, including cigarettes, chewing tobacco, snuff, cigars, and pipes. Symptoms associated with nicotine withdrawal include depression, insomnia, irritability, anxiety, and difficulty concentrating. Craving is another factor leading to continued use of tobacco despite considerable evidence of its contribution to health problems.