nightmare disorder
இரவச்சம், இராப்பீதி, கொடுங்கனவு, தூங்குபவர் மீது உட்கார்ந்து திக்குமுக்காடச் செய்து மூச்சுத் திணறவைப்பதாகக் கருதப்படும் பேயுரு, அமுக்கி,
தமிழ் விளக்கம்
இரவு அச்சம், அச்சுறுத்தும் கனவு, இராப்பீதி, கொடுங்கனவு, மனக்கிலி, தூங்குபவர் மீது உட்கார்ந்து திக்குமுக்காடச் செய்து மூச்சுத் திணறவைப்பதாகக் கருதப்படும் பேயுரு, அமுக்கி, கோரக்கனாக் காட்சி, மனக்கிலி, ஓயாது வந்துவந்து வருத்தும் பெருந்தொல்லை, சிம்ம சொப்பனம் - இது ஒருவகையான தூக்க வியாதி. தூங்கும் போது பயங்கரக் கனவு கண்டோ அல்லது யாரோ தன்னை அமுக்கி திக்குமுக்காடச் செய்வது மாதிரியோ பயந்து எழுந்துகொள்ளல். அந்த பயம், பீதி நாளெல்லாம் நீடித்து, எரிச்சல் கவலையால் அன்றாடப் பணிகளில் குறுக்கிடும். இது கடந்த காலத்தில் கனவினால் வரும் பதட்டக்கோளாறு எனப்பட்டது.
English
One of the sleep disorders, of the parasomnia type, characterized by frequent awakenings from sleep due to frightening dreams, resulting in ongoing distress, irritability, anxiety, or occupational and interpersonal problems. The individual usually becomes fully and rapidly awakened after the nightmare, which often involves an elaborate dream sequence of perceived danger. Nightmare disorder was formerly called dream anxiety disorder; it is not synonymous with sleep terror disorder.