nihilism

சூனியவாதம், எதிர் மறுப்புவாதம், இல்லாமைத் தத்துவம், சுத்த சூனியவாதம், எல்லாம் சூனியமென்று வாதிக்கும் வாதம், சமய ஒழுக்கத்துறைகளில நடைமுறை நம்பிக்கைக் கோட்பாடுகள் யாவற்றையும் மறுக்குங் கொள்கை, இயலுலகு உளதாந் தன்மையை மறுக்குங் கோட்பாடு

தமிழ் விளக்கம்

சமூக அமைப்பு, அரசு, சட்டங்கள், விதிகள், மதிப்பீடுகள் மற்றும் அறவிழுமியங்கள் போன்ற எல்லாவற்றையும் மறுத்தல். அது இயல்பற்றதென்று மறுத்து வாதிடுதல். இந்தக் கண்ணோட்டமுள்ளவர்கள் வன்முறையாளர்களாகவோ, பயங்கரவாதிகளாகவோ மாறி, இயங்கிக்கொண்டிருக்கும் சமூகத்தை நிலைகுலைய வைக்க முயல்வர். அல்லது சீரழிந்த சமூகத்திற்கு மாற்று ஏதுமில்லை என்று செயலற்ற நம்பிக்கையின்மைக்குச் சென்றுவிடுவர்.

English

A denial of the value of any and all social structures, governments and laws, norms and values, and moral principles. Such an orientation may lead one toward violence or terrorism against the established social system but more often results in passive resistance to everything with no alternatives in mind.