NIMBY
நிம்பி, என்னுடைய புழைக்கடையில் / புறக்கடையில் வேண்டாம்
தமிழ் விளக்கம்
தாங்கள் விரும்பாத, தங்களுக்குத் தொந்தரவாக இருக்குமென்று கருதும் திட்டங்களை, எடுத்துக்காட்டாக இடைக்காலத் தங்குமிடங்கள் (மருத்துவமனையில் தங்கி குணமடைந்த மனநோயாளிகள், நன்னடத்தைப் பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள், மது / போதை அடிமைத்தனத்திலிருந்து மீண்டவர்களை, மேலும் சிறிது நாட்கள் வீடுபோன்ற சூழலில் குறைந்த பட்ச வழிகாட்டுதல்களோடு, கண்காணித்து அதன்பின் வீட்டிற்குச் செல்ல உதவும் இடைக்காலத் தங்குமிடங்கள்), சிறைச்சாலை, குப்பைத்தொட்டிகள், கழிவு நீரேற்றகங்கள், மாசுபடுத்தும் தொழிற்சாலை போன்றவைகள் தங்கள் குடியிருப்பிற்கு அருகாமையில் அமைய மக்கள் காட்டும் எதிர்ப்பு. நமக்குப் பொருத்தமான உதாரணம் குடியிருப்பு பகுதிகளில் TASMAC கடைகள் நடத்த மக்கள் காட்டும் எதிர்ப்பு.
English
"Not in my back yard!", a slogan attributed to groups and individuals who oppose the location of an undesired facility (such as a halfway house, jail, garbage dump, or factory) in their neighborhoods.