Nisei generation

நிசே தலைமுறை

தமிழ் விளக்கம்

அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்த ஜப்பானியப் பெற்றோருக்கு 1910 லிருந்து 1939 -1945 (இரண்டாம் உலகப்போர் காலகட்டம்) வரை பிறந்த குழந்தைகள். இவர்கள்ள மீது காட்டப்பட்ட பாரபட்ச உணர்வாலும், இவர்களால் அமெரிக்கப் பண்பாட்டை ஏற்கமுடியாமலும், பல பிரச்சனைகளுக்கு உள்ளாகி போர்க்காலத்தில் தடுப்புக்காவல் முகாம்களில் சிறை வைக்கப்பட்டார்கள்.
பார்க்க: கிபே - கிபே என்றால் ஜப்பானிய மொழியில் 'அமெரிக்கா திரும்புதல்' (returning America) என்று பொருள். கிபே என்றால் அமெரிக்காவில் பிறந்த ஜப்பானியர்கள் கல்வியின் பொருட்டோ, தற்காலிகமாக ஜப்பானில் தங்கியிருந்து விட்டோ அமெரிக்காவிற்குத் திரும்பியவர்கள் என்று பொருள். வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்த பெற்றோருக்குப் (முதல் தலைமுறை) பிறந்த முதல் ஜப்பானியக் குழந்தைகள் நிசெய் - nisei (இரண்டாம் தலைமுறையினர்) என்றும், அவர்களின் பேரன், பேத்திகள் சான்செய் - sansei (மூன்றாம் தலைமுறை) என்றும், கொள்ளுப் பேரன் பேத்திகள் யோன்செய் - yonsei (நான்காம் தலைமுறை) என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

English

Americans of Japanese ancestry, born mostly between 1910 and World War II, whose parents emigrated from Japan. Members of this generation were subject to problems of acculturation and discrimination, culminating in their being placed in internment camps during World War II. See also Sansei generation.