noise pollution
ஒலி மாசு
தமிழ் விளக்கம்
ஒலி மாசு (அல்லது சுற்றுச் சூழலில் மிகையான சத்தம்) என்பது மனதிற்கு ஒவ்வாத வகையில் மனிதனோ, கால்நடைகளோ, அல்லது இயந்திரங்களோ பிறப்பிக்கும் இரைச்சல் அல்லது ஓலியாகும், அது மனிதன் மற்றும் பிற விலங்குகளின் வாழ்க்கை முறைகளையும், செயல்பாடுகளையும் வெகுவாகப் பாதிக்கின்றது. மனிதர்களைப் பாதிக்கும் ஓலி மாசு, பெரும்பாலும் போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகள் மூலமாக ஏற்படுகிறது. உலகெங்கும் பரவலாக இரைச்சல் சத்தம் போக்குவரத்து வாகனங்களால் ஏற்படுகின்றன. வாகனங்களின் ஹாரன் ஓசை, அலுவலகங்களில் பயன்படும் கருவிகள், ஆலை இயந்திரங்கள், கட்டிடப் பணிகள், தரையைச் சுத்தம செய்யும் இயந்திரங்கள், குரைக்கும் நாய்கள், கருவிகள், மின் விசைகள், ஒலிபெருக்கி, மின்விசிறிகள் எழுப்பும் ஒலி, ஆடல் பாடலுக்கான பொழுதுபோக்கு சாதனங்கள், மேலும் சத்தம் போட்டுப் பேசும் மனிதர்கள், ஆகியவை அனைத்தும் வீட்டின் உள்ளும், வீட்டின் வெளியேயும், இரைச்சல் உண்டாவதற்கான காரணிகளாகும்.
English
An excessive and persistent volume of noise in the environment that may lead to hearing disorders, neurological damage, stress, or the inability to rest.