nominal group

பெயரளவுக் குழு

தமிழ் விளக்கம்

Nominal Group என்பது பெயரளவுக் குழு என்று மொழிபெயர்க்கப்படும் போது அது ஏதோ சம்பிரதாயமான குழு மாதிரியும், அது உயிரோட்டமற்ற செயல் மாதிரி பொருள் கொள்ளப்படுவதை தவிர்க்க இயலாது. Nominal குரூப் என்பது ஒரு குழு கட்டமைப்பைக் கொண்டிருந்தாலும், அது குழு செயல்படும் முறையிலிருந்து சற்று வேறுபட்டது. குழு என்றதும் நம் நினைவுக்கு வருவது, உரையாடல்களும், அதையொட்டி உருவாகும் சப்தமும் நினைவுக்கு வரலாம். ஆனால் Nominal குரூப் முறையில், சப்தமிட்டு விவாதிப்பதும், இரைந்து பேசுபவர்களின் கருத்துக்களுக்கு அங்கீகாரம் கிடைக்க, பலரின் கருத்துக்கள் உதாசீனப்படுத்தப்படும் சம்பிரதாய குழுக் கலாச்சாரத்தை மாற்றுகிறது, Nominal குரூப் என்பது குழுதான். ஆனால் அது குழுவின் இலக்கணப்படி செயல்படாது. ஆகவே இதை பெயரவுக் குழுக்கள் என்கின்றனர். இந்தக் குழுவின் உறுப்பினர்கள், கொடுக்கப்பட்ட கேள்விக்கு / நோக்கத்திற்கேற்ப தங்களுடைய கருத்துக்களை யாரிடமும் உரையாடாமல் உருவாக்கிச் சமர்பிப்பிக்க, அந்தக் கருத்துக்கள் இடையீட்டாளரால் தொகுக்கப்பட்டு, அதில் திரும்பத் திரும்ப சொல்லப்படும் கருத்துக்கள் ஒன்றிணைக்கப்பட்டு, முழுப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, சொல்லப்பட்ட சிந்தனைகளை குழு உறுப்பினர்கள் வாக்குகளின் மூலம் முன்னுரிமைப்படுத்தப்பட்டு, முன்னுரிமைப்படுத்தப்பட்ட கருத்துக்களில் எது சாத்தியமானது, இயலுமையானது என்று கண்டறியப்பட்டு, அதன் பின் செயல்திட்டங்கள் வகுக்கப்படும். இது குழுச் சூழ்நிலையில் இரைந்து பேசத்தயங்குகின்ற, கூச்ச சுபாவமுள்ளவர்களையும் ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளத் தூண்டும். Nominal Group என்பது குழுக் கட்டமைப்பை பெற்றிருந்தாலும், குழுவின் பண்புகளைக் கடந்து, ஒவ்வொரு உறுப்பினரும் ஆக்கபூர்வமாகப் பங்கேற்க உதவுகிறது. இந்த முறை சமுதாய அமைப்புப் பணியாளர்களாலும், சமூகக் கொள்கை வடிவமைப்பாளர்களாலும் கையாளப்படுகிறது. இந்த குழு இயங்கு நிலைகள் Step 1. Developing and Stating the Question. Step 2. Working Alone. Step 3. Gathering Ideas. Step 4. Discuss and Clarify Ideas. Step 5. Developing Priorities. Step 6. Counting Votes.

English

A group whose members work in the presence of one another without verbally interacting, usually to establish goals of common interest. For example, a classroom instructor might use this approach by asking students in a new class to write their goals for the class or their objections to the curriculum so far.