nominal group technique

பெயரளவுக் குழுவில் கையாளப்படும் உத்திகள் / முறைகள்

தமிழ் விளக்கம்

பெயரளவிற்கான குழுக்கள் ஒரு சமுதாயத்தின் பிரச்சனைகள், தேவைகள், விருப்பங்கள், இலக்குகள் போன்றவற்றைப் புரிந்துகொள்ள சமூகத் திட்டமிடலில் ஈடுபடும் நிபுணர்களால் கையாளப்படுகிறது. இதில் பங்கேற்கும் உறுப்பினர்களிடம் கொடுக்கப்பட்ட நோக்கத்திற்கோ, இலக்கிற்கோ ஏற்ற கருத்துகளை சிறு அட்டைகளில் எழுதி வாங்கி, அதை இடையீட்டாளர் எல்லோருடைய பார்வையிலும் படுமாறு வைத்து, சொல்லப்பட்ட கருத்துக்களை நடைமுறைப்படுத்த, சமூக, பொருளாதார சாத்தியக்கூறு, மக்களின் ஆர்வம், ஏற்படும் தடைகள் போன்றவற்றின் பின்னணியில் விவாதிக்கத் தூண்டுவர். அந்த விவாதத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கப்படும்.

English

A tool used by social planners in organization development (OD) to assess existing problems, needs, interests, or objectives. Participants in a meeting write these factors on small cards. The leader collects and categorizes the cards and posts them on a board for all to see. Then the group members consider each issue and decide how to proceed. Alternatives are considered as to cost, readiness, motivation, acceptability, and availability of other resources.