nondirective therapy

ஏவுரையற்ற, தூண்டுதலற்ற, இலக்கை நிர்பந்திக்காத சிகிச்சை

தமிழ் விளக்கம்

இதை வாடிக்கையாளரை மையப்படுத்திய உளப்பிணி சிகிச்சை, மன இயல்பை மையப்படுத்திய உளப்பிணி சிகிச்சை என்றும் சொல்வர். பிரச்சனைகள் எந்த முன் மதிப்பீடுகளின்படி இல்லாமல் திறந்த மனதுடன் கேட்கப்படும் என்ற நம்பிக்கையை சமூகப்பணியாளரோ, உளப்பிணி சிகிச்சையாளரோ வாடிக்கையாளர்களிடம் ஏற்படுத்தி, அவர்களை (பிரச்சனைக்குரியவர்களிடம்) அக்கறையுடன் அரவணைத்து, எண்ணங்களை வெளிப்படுத்தச் சுதந்திரமளித்து, மனப்பாங்கறிந்து நடந்துகொள்ளும் போது, பிரச்சனைகளோடு வரும் வாடிக்கையாளர் தன்னுடைய உள்ளார்ந்த அகமுகச் சக்தியைப் பயன்படுத்தி பிரச்சனையிலிருந்து மீண்டெழ முயல்வர் என்ற அனுமானத்தின்படி கார்ல் ரோஜர்ஸ் என்னும் உளப்பிணி சிகிச்சையாளர் கையாண்ட உளப்பிணி சிகிச்சை முறை. வாடிக்கையாளரின் மனித இயல்பை வைத்து சிகிச்சை அளிக்கப்படும் இம்முறையில், சிகிச்சை அளிப்பவர் (சமூகப்பணியாளர்), வாடிக்கையாளர் தன்னுடன் பேசும்போது குறுக்கிடவோ, அதற்கு விளக்கம் அளிக்கவோ (interpret), அவருடைய எண்ணங்களை நியாயப்படுத்துமாறு நிர்பந்திக்கவோ (challenge), அறிவுரை (advise) சொல்லவோ முயலாமல், வாடிக்கையாளரைச் சுதந்திரமாகப் பேசுவதற்கு மட்டும் ஊக்கமளித்து, அவருடைய பேச்சிலிருந்தே பிரச்சனைகளைப் புரிந்துகொள்ளவும், அவரே தீர்வுகளைக் கண்டடையவும் வழிகாட்டும் சிகிச்சை முறை.

English

An approach in counseling or therapy that emphasizes a warm, permissive, accepting atmosphere to encourage the client to discuss problems freely. In the nondirective approach to therapy, called client-centered therapy by some professionals, the social worker or therapist asks very few questions and offers few, if any, suggestions or advice. Rather, the social worker prompts and encourages the client to initiate exploration and follow ideas and feelings.