nongovernment organizations (NGOs)

அரசு சார்பற்ற நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள்

தமிழ் விளக்கம்

பலபெயர்களில், பலநோக்கங்களில், பலவழிமுறைகளைக் கையாண்டு சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் நிறுவனங்கள், அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப வெவ்வேறு பெயர்களிடப்பட்டு அழைக்கப்படுகின்றன. ஆரம்பத்தில் அறநிறுவனங்கள் என்றும், பின்னர் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்கள், அரசுசாரா நிறுவனங்கள், இலாபநோக்கற்ற நிறுவனங்கள், குடிமைச் சமுதாய அமைப்புகள் (civil society organizations), சமூக சேவை முனைவகம் (social enterprise) என்று பலபெயர்களில் அழைக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் சபையும், அதைச் சார்ந்த நிறுவனங்களும் பெரும்பாலும் அரசுத்துறைகளுடனே இணைந்து செயல்படும். அரசுத்துறை சாராத நிறுவனங்களைத் தங்களின் ஆலோசனைகளில் பங்கெடுக்க அழைத்த போது, அதைக்குறிக்க அரசு சார நிறுவனங்கள் என்று அழைக்கத்தொடங்க, அதுவே இந் நிறுவனங்களின் தன்மையைப் பிரதிபலித்ததால், அந்தப் பெயரே நிலைபெற்றுவிட்டது. எப்படிப்பெயரிட்டு அழைக்கப்பட்டாலும், சிறிதும் பெரிதுமான இந்நிறுவனங்களின் நோக்கம் மானுட நலனே. கல்வி, சுகாதாரம், பொருளாதார மேம்பாடு, மனித உரிமைகள், பெண்கள், சிறுவர், முதியோர் நலன், சமூக மாற்றம், சமூக சமத்துவம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, புலம்பெயர்ந்தோர் நலன் என்று பல தளங்களில் இந்நிறுவனங்கள் செயல்படுகிறது. சில நிறுவனங்கள் தேசிய அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக அரசு எதிர்ப்பு முயற்சிகளையும் செய்கிறது. பலநாடுகளிலும், ஐக்கிய நாட்டு அமைப்புகளும் இந்நிறுவனங்களுக்கு ஆலோசகர் அந்தஸ்து அளித்துள்ளது. இந்த நிறுவனங்கள், அரசுத் தலையீடின்றி, தங்கள் நோக்கங்களை வரையறை செய்துகொண்டு, அதற்கான ஆதாரங்களைத் தாங்களாகவே திரட்டிக்கொண்டு, செயல்படும் நிறுவனங்களாகும்.

English

Nonprofit institutions or agencies that work to serve some public interests. Funded mostly by private contributions, foundations, and grants from various nations, NGOs often seek to improve social problems that exist internationally; enhance the rights, knowledge, and economic opportunities of all people; and help nations and cultures in development efforts. They do so by educating the public about social problems, investigating conditions that may lead to social and environmental problems, mobilizing people to help resolve crises, and independently monitoring the actions various governments impose on their own peoples. Many NGOs serve as consultants to national governments on specific issues and to the United Nations and its specialized bodies. NGOs are also called private voluntary organizations (PVOs).