nonprofessional
துணைத் தொழிலினர்
தமிழ் விளக்கம்
ஒரு சிறப்புதொழிலின் (profession) ஏதாவதொரு தொழிற்கூறை அனுபவத்தின் அடிப்படையிலோ, பயிற்சி மூலமாகாவோ, சிறப்புத் தொழிலினரின் நேரடியான வழிகாட்டுதலின் படியோ அல்லது அவருடைய வேண்டுகோளின்படியோ செய்பவர். இவர்களின் பயிற்சியைப் பொறுத்தும், அவர்கள் பெற்ற உரிமச் சான்றுகள் பொறுத்தும், சிறப்பு பெயர்களிலோ (எ.கா. செவிலியர், சமூகப்பணியாளர், இயக்க முறை மருத்துவர், மருந்தாளுனர்) அல்லது உதவியாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள் என்ற பெயரிலோ, குறைந்த தொழில்நுட்பம் தேவைப்படுகிற பணிகளைச் செய்வார்கள். இவர்களையும் பணித்துறை ஒழுங்காசாரத்திற்கு மாறாகத் (unprofessional / quacks) தொழில் செய்பவர்களையும் இணையாகக் கருதக்கூடாது.
English
One who is not a professional. Generally, the term is applied to a paraprofessional, support staff, ancillary personnel, and volunteers who work with professionals in service organizations, such as social agencies and hospitals, and assist the professionals in accomplishing less-technical tasks. Nonprofessionals usually have specific training or experience in the jobs they carry out. The term should not be confused with unprofessional.