nonprofit agencies

இலாப நோக்கற்ற நிறுவனங்கள்

தமிழ் விளக்கம்

ஒரு நிறுவனத்தை, அதிலிருந்து இலாபம் பெரும் நோக்கத்துடன் இல்லாமல் ஒரு சமூகக் குறிக்கோளை அடைவதற்காக ஏற்படுத்தி நடத்தி வரும் நிறுவனங்கள். அடிப்படையில் அரசு நிறுவனங்களை அல்லது அரசு நிதி பெற்று நடக்கும் நிறுவனங்களைத்தான் இலாபநோக்கற்ற நிறுவனங்கள் என்று சொல்ல வேண்டுமென்றாலும், நடைமுறையில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையே இச்சொல் குறிக்கிறது. இந்நிறுவனங்கள் தமக்கென தெளிவான குறிக்கோள்களையும், அதை வெளியார் தலையீடின்றி நடத்திச் செல்ல இயக்குனர் குழுவையும் கொண்டியங்குவது. இதை நடத்துபவர்கள் கொடுக்கும் பொருளுதவி, வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் சேவைக்கட்டணம், நிறுவன் நோக்கங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக பொதுமக்களிடமிருந்து கிடைக்கும் நன்கொடைகள், அறக்கட்டளைகள் / தனவந்தர்களின் உதவி, அரசின் மானிய மற்றும் சலுகைகள் என்று பல்வேறு வழிகளிலிருந்து இந்நிறுவனங்கள் நிதி உதவி பெறுகின்றன. இலாபநோக்காற்று செயல்படும் இந்நிறுவனங்களுக்கு பெரும்பாலும் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.

English

Organizations established to fulfill some social purpose other than monetary reward to financial backers. Technically the term includes government or tax-supported agencies, but it is usually reserved for private, voluntary social agencies, and excludes for-profit proprietary social agencies. Nonprofit agencies have explicit policies and established boards of directors. They are funded from a variety of sources, including revenue coming directly from clients, third parties, public contributions, philanthropic contributions, and government grants-in-aid; they are usually tax exempt. Most of the traditional social agencies, professional associations, and social change organizations are nonprofit. Examples include Family Service America (FSA), Catholic Charities USA, the Child Welfare League of America (CWLA), the National Association of Social Workers (NASW), the National Association for the Advancement of Colored People (NAACP), the American Civil Liberties Union (ACLU), and the Red Cross. See also nongovernment organizations (NGOs).