nontraditional family

மரபற்ற / வரன்முறையற்ற / சம்பிரதாயமற்ற / குலாச்சாரமற்ற குடும்பங்கள்

தமிழ் விளக்கம்

ஒரு தாய், தந்தை, அவர்களுடைய குருதிக் குழந்தைகள் என்ற சம்பிரதாயத் தன்மையிலிருந்து விடுபட்டு, பல்வேறுவிதமான உறவுகளைக்கொண்ட குடும்பங்கள். ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள், மாற்றாந்தாய், மாற்றாந்தந்தை மற்றும் அவர்களுடைய குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள், ஓரினச் சேர்க்கையாளர்களைப் பெற்றோராகக் கொண்ட குடும்பங்கள், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் தமபதியினரைக் கொண்ட குடும்பங்கள், தாய்வழிக் குடும்பங்கள், இனக்குழு குடும்பங்கள் என்று எவ்வித சம்பிரதாயம்ற்ற குடும்பங்கள்.
பார்க்க: Family - குடும்பம், இரண்டு பெற்றோர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் ஒன்றாக வாழும் அலகு. ஒரு பொதுவான மூதாதையர் வழிவந்த சந்ததிகள் - மனித சமூகத்தில் குடும்பம் என்பது இரத்த உறவினாலோ (ஒரு தாய்க்கோ தந்தைக்கோ பிறத்தல்), திருமண உறவினாலோ, அல்லது ஓரிடத்தில் வளர்வதாலோ இரண்டிற்கு மேற்பட்ட நபர்கள் / அல்லது ஒரு குழுவுக்குள் ஏற்படும் இணைப்பு. நெருங்கிய குடும்பம் என்பது கணவன், மனைவி, பெற்றோர், சகோதர, சகோதரி, மகன் மற்றும் மகள் கொண்டதாகவும், நீட்டிக்கப்பட்ட அல்லது விரிவான குடும்பம் என்பது தாத்தா பாட்டி, அத்தை, மாமா, சகோதரர் மனைவி (அண்ணி), சகோதரி கணவர் (மைத்துனர்) அவர்களின் குழந்தைகள் கொண்டதாகவும் அமையும். பெரும்பாலான சமூகங்களில் குடும்பமே குழந்தைகளை வளர்த்தெடுத்து சமூகமயமாக்கும் நிலையம். ஓரிடத்தில் வசிக்கின்ற, ஒருவருக்கொருவர் பொறுப்பாக, கடமைகளைப் பகிர்ந்துகொள்ளும் குழுவைப் பொதுவாக குடும்பம் என்ற சொல்லால் குறிக்கின்றனர். தேசிய சமூகப்பணியாளர் சம்மேளனம் (The National Association of Social Workers (NASW) 'குடும்பம் என்பது இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களோ, தங்களைக் குடும்பமாகக் கருதி, ஆரோக்கியமான குடும்ப வாழ்விற்கு உதவுவதான குழந்தை வளர்ப்பு, குழந்தைகளைச் சமூகமயமாக்கல், வருமானமீட்டல் மற்றும் ஆதரவு, காலக்கட்டுப்பாடின்றி செய்து கொள்ளும் பராமரிப்பு போன்ற பொறுப்புக்களையும் கடமைகளையும் செய்ய ஒப்புக்கொண்ட குழு' என்று வரையறுத்துள்ளது.

English

A term, sometimes used pejoratively, to indicate families that fall outside some predetermined norm, such as two parents with the father in charge and no more than several children. So-called nontraditional families may be composed of myriad relationship patterns, including blended families, interracial groups, gay and lesbian families, matriarchal families, and communal groups.