nonverbal communication

சொற்களற்ற தொடர்பாடல் / கருத்துப் பரிமாற்றம்

தமிழ் விளக்கம்

சொற்களைவிட, சைகைகள், முகபாவனைகள், தோரணை, உடல்மொழி, குரல்தொணி, குரல் ஒலி போன்றவைகளின் மூலம் செய்திகளைத் தெரிவித்தல் அல்லது கருத்து பரிமாறிக்கொள்ளல்.
பார்க்க: Communication Theory - மக்கள் தங்களுக்கிடையே எப்படித் தகவல்களைப் பரிமாறிக்கொள்கிறார்கள் எனபதை விளக்கும் கோட்பாடு. இதில் தகவலின் உள்ளடக்கம், தகவல்கள் எப்படி கட்டுப்படுத்தப்பட்டு வெளிப்படுத்தப்படுகின்றது (cybernetics), குறியீடுகளைப் புரிந்து கொள்ளல், தகவலுக்குப் பின்னூட்டமிடுதல், உடல்மொழி (kinesics), தகவலில் அடங்கியிருக்கும் அடிப்படைப் பொருள் போன்ற பல காரணிகள் உள்ளடங்கியிருக்கின்றன
kinesics: உடலசைவியல் - உடலசைவியல் என்பது சொல்லிலாத் தகவல்தொடர்பு முறைகளை விளக்குவதாகும். இது உடலின் நிலை, சைகைகள் மற்றும் கண்ணின் அசைவுகள் ஆகியவைகளைக் கொண்டு விளக்கப்படுகிறது. மனிதர்களின் தகவல் தொடர்பில் 93% உடலசைவாலும், சொல்லல்லாத கூறுகளாலும், 7% சொற்களாலான கூறுகளாலும் நடப்பதாக அறியப்பட்டிருக்கின்றது. ஆல்பர்ட் மெஹ்ராபியன் என்பவர் பிறர் 'புரிந்துகொள்ளும் அர்த்தங்களில், 60 மற்றும் 70 சதவீதம் சொல்லிலா நடத்தைகளினாலேயே புரிந்துகொள்ளப்படுகின்றன' எனக் கூறுகின்றார். உடல்மொழியானது ஒரு மனிதனின் மனோபாவம் அல்லது மனநிலை ஆகியவற்றை அறிந்துகொள்ள உதவக்கூடிய வகையில் குறிபுணர்த்துகிறது. முரட்டுத்தனம், விழிப்புணர்வு, சலிப்பு, தளர்வான நிலை, இன்பம், கேளிக்கை போன்றவற்றையும்,, கையசைவு, சுட்டுதல், தொடுதல் மற்றும் சாய்ந்த உடல் நிலை (கூன் விழுந்த நிலை) போன்ற உடல்மொழி மனிதர்களின் பல்வேறு மனநிலைகளைகளைப் புரிந்துகொள்ள உதவுகிறது. ஆகவே உடல் அசைவு மற்றும் அதன் வழியாக உணர்வுகளை வெளிப்படுத்தல் ஆகியவற்றைப் பற்றிய ஆய்வு உடலசைவியல் எனப்படுகிறது. மனிதர்கள் பேசும்போது உடலை அசைக்கின்றனர், 'சொற்களை உபயோகித்துச் செய்யப்படும் தகவல்தொடர்பு சிலருக்குக் கடினமானதாக இருக்கும்போது, உடலசைவுகள் மன ரீதியான சிரமத்தைக் குறைக்க உதவுகிறது' உடல் ரீதியான வெளிப்படுத்தல்கள் மூலம், அவற்றைப் பயன்படுத்தும் நபரைப் பற்றிய பல விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியும். எடுத்துக்காட்டாக, முகபாவங்கள் ஒரு குறிப்பிட்ட கருத்தை அல்லது செய்தியை அழுத்தமாக வெளிப்படுத்த உதவுகின்றன, உடலசைவானது ஒரு செயலிலுள்ள சலிப்பை அல்லது ஆர்வத்தை அறிந்துகொள்ள உதவலாம்.

English

Exchanges of information between people through gestures, facial expressions, posture, tone of voice, and vocal sounds other than words. See also communication theory, kinesics, paralinguistics, and proxemics.