nonviolence
வருத்தாமை, ஊறு இழைக்காமை, கொல்லாமை, அறவழி, துன்பம் செய்யாமை, வன்முறை தவிர்த்தல்
தமிழ் விளக்கம்
எதேச்சதிகார அரசையோ அல்லது சமூக மாற்றங்களை வற்புறுத்தியோ, அறவழியில், அமைதியான முறையில் எதிர்ப்புத் தெரிவிப்பது அல்லது செயலற்ற எதிர்ப்புத் (ஒத்துழையாமை, உண்ணாவிரதம்) தெரிவிப்பது. சமஸ்கிருதத்தில் அகிம்சை என்று சொல்லப்படும் இந்த வார்த்தை, ஒரு தத்துவ நிலைப்பாடும், செயல்பாட்டு முறையுமாகும். அகிம்சை என்பது பிற மனிதர்களை, பிற உயிரினங்களை துன்புறுத்தாமை என்று பொருள்படும். ஒரு குறிக்கோளை அடைவதற்காக மனிதர்களுக்கோ, பிற உயிரினங்களுக்கோ அல்லது சுற்றுச் சூழலுக்கோ ஊறு விளைவிக்கத் தேவையில்லை என்பது அகிம்சைக் கோட்பாட்டின் நிலையாகும். சத்தியாகிரகம் அகிம்சையின் செயல்வடிவம். உண்மையை, சத்தியத்தை அடைய மனதளவில் மட்டுமல்ல, சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களிலும் வன்முறையைத் தவிர்க்க வேண்டுமென்றும், சரியான வழிமுறைகளைக் கையாள்வதன் மூலமாகவும், அன்பின் மூலமாகவும் தனிமனித மற்றும் சமூகக் குறிக்கோள்களை அடையமுடியும் என்றும் சத்தியாகிரகம் உணர்த்துகிறது.
English
An approach in campaigning for social change that stresses peaceful demonstrations, especially through passive resistance.