NORD
அரிய, அபூர்வமான / அரிச்சலாக / ஏகதேசமாக வரும் நோய்கள், அரிய வகை நோய்களுக்கான தேசிய சங்கம்
தமிழ் விளக்கம்
அரிய வகை நோய்கள் என்பது ஆயிரத்தில் ஒருவருக்கும் குறைவாக வரும் நோய்கள். இந்த நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு, ஆராய்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு போன்ற செயல்களை முன்னெடுக்க அபி மெயர்ஸ் என்பாரால் 1982 ஆம் ஆண்டு அரிய வகை நோய்களுக்கான தேசியச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் முயற்சியால் orphan drugs என்ற சட்டம் உருவாக்கப்பட்டது. அரிய நோய்களுக்கான மருந்துகளும் அரிதாகவே இருக்கும். இந்த நோய்களுக்கான மருந்து தயாரிப்பு வணிக ரீதியில் இலாபம் தராதாகையால், இந்நோய்களுக்கான மருந்து தயாரித்தலை ஊக்கப்படுத்துவதற்காக அரசு சலுகைகளைத் தருவதுடன், மருந்து உற்பத்தி மீதான கட்டுப்பாடுகளையும் அரசுகள் தளர்த்தி, புது சிகிச்சை முறைகளை ஊக்குவிக்கும். இந்த மாதிரியான மருந்துகளை தர்ம மருந்துகள் என்றழைக்கலாம்,
(தர்ம மருந்துகள் என்பது வணிக ரீதியாக வளர்ச்சி அடையாத நிலையில் இருக்கும் ஒரு செயற்கை மருந்து)
(தர்ம மருந்துகள் என்பது வணிக ரீதியாக வளர்ச்சி அடையாத நிலையில் இருக்கும் ஒரு செயற்கை மருந்து)
English
The National Organization for Rare Disorders. See rare disorders.