norepinephrine

நோர்பைன்ஃபெரைன்

தமிழ் விளக்கம்

நோர்பைன்ஃபெரைன் என்பது என்பது மனித உடலில் நரம்புகளிக்கிடையே தகவல் பரிமாற்றத்திற்கு உதவும் நியூரோ டரான்ஸ்மிட்டர்ஸ் என்னும் ஒருவகையான அகச்சுரப்பி இரசாயனங்கள். அகச்சுரப்பித் தொகுதி, நரம்புத் தொகுதியைப் போல ஒரு தகவல் சைகைத் தொகுதியாகும். நரம்புத் தொகுதி தகவல்களை அனுப்புவதற்கு நரம்புகளைப் பயன்படுத்துகின்றது. ஆனால், அகச்சுரப்பித் தொகுதி சுரக்கும் இரசாயனங்கள் தகவல்களை அனுப்புவதற்குப் பெரும்பாலும் குருதியில் தங்கியுள்ளது. நியூரோ டரான்ஸ்மிட்டர்ஸ் இரசாயனங்கள் நரம்பிணைப்புகளில் உள்ள சிறு கொப்புளங்கலிருந்து வெளியிடப்பட்டு ஒரு நரம்பிணைப்பிலிருந்து தகவல்களை இன்னொரு நரம்பிணைப்பிற்குக் கடத்துகிறது. நோர்பைன்ஃபெரைன் அளவாகச் சுரந்தால், தகவல் தொடர்பிற்கு உதவும். அளவுக்கு அதிகமானால் உளச் சிதைவு நோய்க்கும், பிற உள நோய்களுக்கும் காரணமாக அமைந்துவிடும். நோர்பைன்ஃபெரைன் குறைந்த இரத்த அழுத்த நோயில் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

English

A biochemical of the central nervous system (CNS) that in normal amounts facilitates neurotransmission, but in abnormal amounts is related to some forms of psychosis and other mental disorders.