normal retirement age (NRA)
சாதாரணமாக ஓய்வு பெரும் வயது
தமிழ் விளக்கம்
அமெரிக்கக் குடிமக்கள், முதியோருக்கான சமூகப் பாதுகாப்பு பயன்களைப் பெற்றுக்கொள்ள, சமூகப் பாதுகாப்புத் துறை பயன்படுத்தும் சொல்லாடல். ஒருவரின் ஓய்வு பெரும் வயது அரசால் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், சிலர் பல்வேறு காரணங்களால் குறிப்பிட்ட வயதடையுமுன்னரே ஓய்வு பெற்றுவிடுவார்கள். இதைத் தவிர்க்க முதியோருக்கான ஓய்வூதியப் பயன்கள் பெரும் தகுதியை (வயதை) ஒவ்வொருநாடும் உயர்த்திக்கொண்டே செல்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் ஒருவர் விருப்ப ஓய்வில் செல்லலாம். ஆனால் ஓய்வூதியப் பயன்கள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேலேதான் கொடுக்கப்படும். அமெரிக்காவில் 2022 ஆம் ஆண்டு சாதாரணமாக ஓய்வு பெரும் வயது 67 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
English
A Social Security Administration (SSA) term for the time when people can begin collecting their full social security benefits. The SSA plans that beginning in the year 2000 the NRA will rise gradually over 22 years so that by 2022 it will be age 67.