normative needs
குறித்த நிலைக்கு கொண்டு வருதல் சார்ந்த தேவைகள், இலட்சிய / நெறிசார்ந்த தேவைகள் (normative needs), மானுடர்க்கு கொடுக்கப்படவேண்டும் என்ற இலட்சியத்தின் அடிப்படையில் உருவானது
தமிழ் விளக்கம்
ஒருவர் வாழும் சமூகம் அல்லது கலாச்சாரம் நிர்ணயித்த வாழ்க்கைத் தரத்தை அடைய / வாழ தேவைப்படுபவை. இது பெரும்பாலும் நிபுணர்கள் தங்கள் ஆய்வின் மூலமாகப் பரிந்துரைக்கும் தேவைகள். எடுத்துக்காட்டாக 12-15 மாதத்திற்குள்ளான குழந்தைகள் எல்லோருக்கும் போலியோ மற்றும் தாளம்மை தடுப்பூசி போடப்படவேண்டும் என்ற கருத்து.
பார்க்க: தேவைகள் - ஒரு மனிதன் உயிர்வாழவும், நலமான, நிறைவான வாழ்க்கை வாழ பூர்த்திசெய்யப்பட வேண்டிய உடல், மனம், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சமூகம் சார்ந்த தேவைகள். இத்தேவைகள் பலவகைப்படும் 1. இலட்சிய / நெறிசார்ந்த தேவைகள் (normative needs) மானுடர்க்கு கொடுக்கப்படவேண்டும் என்ற இலட்சியத்தின் அடிப்படையில் உருவானது, 2. உணரப்பட்ட தேவைகள் (perceived needs) தனக்கு இது வேண்டுமென்று ஒவ்வொரு மனிதராலும் உணரப்பட்ட தேவைகள், 3. வெளிப்படுத்திய தேவைகள் (expressed needs) தன்னுடைய தேவைகளை வாய்மொழியாகவோ எழுத்துமூலமாகவோ சமந்தப்பட்டவருக்குத் தெரிவித்த தேவைகள், 4. ஒப்பீட்டளவிலான தேவைகள் (relative needs) பிறர் வைத்திருப்பதால் தனக்கும் வேண்டுமென்று தோன்றும் தேவைகள். சமுதாய அமைப்புப் பணியில் தேவைப் பூர்த்திக்காக முயலும் போது, ஒரு சமுதாயத்தின் தேவைகளில் எந்தத் தேவை இந்த நான்கு தேவைகளின் ஊடே செல்கிறது என்பதை உணர்ந்து, அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய முயலும் போது சமூக ஒத்துழைப்புக் கிடைக்கும்.

English
The requirements for a level of well-being that is comparable to the standards established in the community or culture to which one belongs. Usually, experts or outsiders decide what the standard is. See also perceived needs, expressed needs, and relative needs.