North American Association of Christians in Social Work (NAACSW)

வட அமெரிக்கா கிருஸ்துவ சமூகப்பணியாளர்கள் சங்கம்

தமிழ் விளக்கம்

கிருஸ்துவ மத நம்பிக்கையுள்ள, பயிற்சி பெற்ற சமூகப்பணியாளர்களின் அமைப்பு. சமூகப்பணியை சுவிஷேசப்பணியின் (விவிலிய 'நற்செய்தி'யின் பின்னணியில்) அர்ப்பணிப்புடன் செய்ய, வீட்டன் கல்லூரியில் (Wheaton College in Illinois) நடந்த கலந்துரையாடல்களின் விளைவாக, 1953 ஆம் வருடம் கிருஸ்துவ சமூகப்பணியாளர்களின் தேசிய சங்கமாக உருவாகி, 1984 ஆம் ஆண்டு வட அமெரிக்க கிருஸ்துவ சமூகப்பணியாளர்கள் சங்கம் என்று தற்போதய பெயர் பெற்றது. இந்த அமைப்பு 1974 ஆம் ஆண்டிலிருந்தே தேற்றுபவன் (Paraclete) என்று பொருள்படும் 'கிறிஸ்தவமும் சமூகப்பணியும்' என்ற வருடத்திற்கு இருமுறை வெளியாகும் பத்திரிகையை வெளியிடுகிறது.

English

An organization of professional social workers who profess belief in Christian thought and values. The organization began in 1950 at Wheaton College in Illinois with a series of meetings known as the Evangelical Social Work Conference. The conference was incorporated as the National Association of Christians in Social Work in 1953, adopting its present name in 1984. Its publication Social Work and Christianity (originally "Paraclete") has been issued semiannually since 1974.