nosology
நோய்களைப் பாகுபாடு செய்து பிரித்தல், நோய் பிரிப்பியல், நோய் பிரிவாக்கவியல், நோய் வகுப்பியல், நோய்ப் பகுப்பியல்
தமிழ் விளக்கம்
நோய் வகைப்பாட்டியல் என்பது கிரேக்க மொழி வேர்ச் சொல்லிலிருந்து பெறப்பட்டது nosos என்றால் நோய் logia என்றால் அறிதல் என்று பொருள். மருத்துவர்கள் பொதுவாக நோய்களை அதன் காரணத்தைக் கொண்டும், நோயை உண்டாக்கும் கிருமிகளைக் கொண்டும், நோயின் அறிகுறிகளைக் கொண்டும், ஒரு நோய் உடலின் எந்த பாகத்தில் தோன்றியது என்பதைக் கொண்டும் வகைப்படுத்துவார்கள். நோயின் காரணங்கள் தெரியாத பட்சத்தில், எந்தக் கிருமி தொற்றினால் உருவானது என்று தெரியாத பட்சத்தில் நோய்வகைப்பாடு பெரும்பாலும் அறிகுறிகளை வைத்தோ, அறிகுறிகளின் தொகுப்பை வைத்தோதான் வகைப்படுத்தப்படுகிறது.
English
The science of classification, particularly of diseases and disorders.